- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஒரே வாரத்தில் முடி உதிர்வு குறைய

ஒரே வாரத்தில் முடி உதிர்வு குறைய

- Advertisement -

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படும். இந்த முடி உதிர்தல் பிரச்சனையை நீக்குவதற்கு பெண்கள் அதிக அளவில் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், ஆண்கள் அந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் பல ஆண்களுக்கு இந்த முடி உதிர்தல் பிரச்சனை என்பது படிப்படியாக அதிகரித்து வழுக்கை ஏற்படும் அளவிற்கு கூட கொண்டு சென்று விடுகிறது. முடி உதிர்தல் அதிகரிக்கும் பட்சத்தில் எந்த முறையில் ஹேர் பேக் செய்தால் முடி உதிர்தலை நிறுத்த முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு ஹெல்மெட் அணிவதாலோ, அதிகப்படியாக கோபம் கொள்வதாலோ, உடல் நலக்குறைவாலோ முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும். இது பெண்களுக்கும் பொதுவானது தான். இதோடு சத்துக் குறைபாடினாலும் முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஏற்படும். எதனால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறதோ அதை சரி செய்வதோடு இந்த ஒரே ஒரு ஹேர்பேக்கை மட்டும் உபயோகப்படுத்தினால் கண்டிப்பாக முறையில் முடி உதிர்தலை ஒரே வாரத்தில் குறைக்க முடியும்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நாம் செய்வதற்கு நமக்கு வெந்தயப் பொடி வேண்டும். வெந்தயத்தை ஊற வைத்தும் அரைத்துக் கொள்ளலாம். பொடி செய்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பொடியாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தய பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மிக்சிங் பவுலில் போட்டு அதில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக இதனுடன் நாம் முக்கியமாக சேர்த்துக் கொள்ளப் போவது கருவேப்பிலை. 5 கொத்து நல்ல கருவேப்பிலையை உருவி மிக்ஸி ஜாரிலோ அல்லது அம்மிலோ போட்டு நைசாக அரைத்து அதையும் இந்த வெந்தய தண்ணீருடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு ஒரு மெல்லிய துணியை பயன்படுத்தி இவை அனைத்தையும் ஊற்றி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைமுடிக்கு ஏற்றார் போல் இதில் நாம் தண்ணீரை கலந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதை அப்படியே நம்முடைய தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடலாம். இந்த முறையில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் தொடர்ச்சியாக செய்து வர எப்பேர்ப்பட்ட முடி உதிர்தலாக இருந்தாலும் அந்த முடி உதிர்தல் பிரச்சினை என்பது படிப்படியாக குறைய ஆரம்பித்து ஒரே வாரத்தில் நல்ல பலனை உங்களால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை உதிர வைக்க அழகு குறிப்பு
இயற்கையில் அதுவும் எளிதில் கிடைக்கக்கூடிய அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்த இரண்டு பொருட்களையும் நாம் பயன்படுத்தி நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

சற்று முன்