- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணக்கஷ்டத்தை தீர்க்கும் கல் உப்பு

பணக்கஷ்டத்தை தீர்க்கும் கல் உப்பு

- Advertisement -

எந்தப் பக்கம் திரும்பினாலும் பணம் என்பது கண்டிப்பான முறையில் தேவை. சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்வதாக இருந்தாலும் சரி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதாக இருந்தாலும் சரி, அனைத்திற்குமே பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணம் நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு கிடைத்துவிட்டால் நம்மை போல அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. ஆனால் ஒரு சில நேரத்தில் நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்காமல் பணக்கஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவை அதிகரிக்கவும் பணப்பிரச்சினை நீங்கவும் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும், பணக்கஷ்டத்தை நீக்கவும், பணத்தடை விலகவும் செய்யக்கூடிய பரிகாரங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் தினமும் செய்ய வேண்டும். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது இந்த பரிகாரத்தை செய்யலாம். தென்மேற்கு மூலையிலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.

இதற்கு சுத்தமான ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய சுத்தமான குடிக்கும் தண்ணீரை பிடித்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 கல் உப்பு இருந்தால் கூட போதும்.

- Advertisement -

இப்பொழுது இந்த கல்லுப்பை கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தாயாரிடம் உங்களுடைய பண கஷ்டங்கள் தீரவேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும், வருமானம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு கையில் இருக்கும் கல் உப்பை அந்த டம்ளரின் போட்டு விட வேண்டும்.

அடுத்ததாக ஒரே ஒரு செவ்வரளி பூவை எடுத்து அந்த தண்ணீரில் வைத்து விடுங்கள். செவ்வரளி பூ கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் வேறு ஏதாவது ஒரு பூவை கூட வைத்து விடலாம். அவ்வளவுதான் பரிகாரம் மறுநாள் காலையில் மறுபடியும் பூஜை அறைக்கு சென்று இந்த தண்ணீரை எடுத்து வாஷ்பேஷன் அல்லது சிங்கில் ஊற்றி விட வேண்டும். எக்காரணம் கொண்டும் செடிகளிலோ, மரத்தின் அடியிலோ இந்த தண்ணீரை ஊற்றக்கூடாது.

- Advertisement -

பிறகு இந்த டம்ளரை சுத்தம் செய்து மறுபடியும் இதே முறையில் மகாலட்சுமி தாயாரிடம் உங்களுடைய வேண்டுதலை வைத்துவிட்டு கல் உப்பை அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும் இப்படி நாம் தினமும் கல்லுப்பை நம்முடைய கையில் வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய கை ராசியான கையாக மாறுவதோடு நாம் தொட்டது அனைத்தும் துலங்கும். இதனால் பணவரவு என்பது அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதால் பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே:சாம்பிராணி தூப பலன்கள்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் தினமும் செய்து பலன் பெறலாம்.

சற்று முன்