- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க

வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க

- Advertisement -

எவ்வளவு பெரிய பங்களா வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருந்தால்தான் அந்த வீடு சொர்க்கமாக தெரியும். அப்படி அந்த வீட்டில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்றால் தெய்வ சக்தி இருக்க வேண்டும். தெய்வ சக்தி ஏற்படுவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது கண்டிப்பாக முறையில் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். அந்த வழிமுறைகள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நாம் இருக்கும் வீடு எந்த அளவு இருக்கிறது என்பது முக்கியமில்லை. நம் வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதும் முக்கியமில்லை. ஆனால் நமக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்றால் நம் வீட்டில் தெய்வ சக்தி என்பது இருக்க வேண்டும். அப்படி தெய்வ சக்தி ஏற்படுவதற்கு செய்யக்கூடிய வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க

எந்த ஒரு வீட்டில் இருக்கும் நபர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அனுசரித்து, சண்டைகள் இல்லாமல் இருக்கிறார்களோ அந்த வீட்டில் தெய்வ சக்தி என்பது அதிகரிக்கும். அடுத்ததாக எந்த வீட்டில் காலையிலே மாலையிலோ பூஜை செய்யும்பொழுது மணியோசை எழுப்பி பூஜை செய்கிறார்களோ அந்த வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும்.

அதாவது தினமும் விளக்கேற்றி சாமி கும்பிடும் பொழுது மணி அடித்து சாமி கும்பிட வேண்டும். தினமும் செய்ய இயலவில்லை என்றால் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களாவது மணியடித்து சாமி கும்பிட வேண்டும். மணியின் ஓசைக்கு தெய்வத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.

- Advertisement -

மூன்றாவதாக அவ்வாறு நாம் பூஜை செய்யும் பொழுது நமக்குத் தெரிந்த ஏதாவது மந்திரங்களை நாம் சற்று சத்தமாக உச்சரித்து வழிபட வேண்டும். மந்திர ஒலி ஒலிக்கும் இடத்தில் தெய்வ சக்தி ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பலரது இல்லங்களிலும் மந்திர ஒலி 24 மணி நேரமும் ஒலிக்கும்படி வைத்திருப்பார்கள். அப்படி செய்யா விட்டாலும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது மந்திர ஒலி வீட்டில் ஒலிக்கச் செய்வது தெய்வ சக்தியை ஈர்க்கும்.

கடைசியாக வீட்டிற்குள் வரும் பொழுது நறுமணம் வீச வேண்டும். அதற்கு பதிலாக துர்நாற்றம் வீச கூடாது. எந்த வீட்டில் துர்நாற்றம் வீசாமல் நறுமணம் மணக்கிறதோ அந்த வீட்டில் தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக இருக்கும். அதற்கேற்றார் போல் நாம் தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி, தசங்கம் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டுவது மிகவும் சிறப்பு. மற்ற நாட்களில் நல்ல வாசனை மிகுந்த கம்ப்யூட்டர் சாம்பிராணியோ, ஊதுபத்தியோ வீட்டு பூஜை அறையில் பயன்படுத்த வேண்டும்.

இவை அனைத்தையும் மேற்கொள்ளும் நபர்களுடைய இல்லத்தில் தெய்வ சக்தி என்பது அதிகரிக்கும். தெய்வ சக்தி அதிகரிப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். தீய சக்திகள் விலகும். இதனால் நாம் தொட்ட காரியம் அனைத்தும் துலங்கும். பணவரவு அதிகரிக்கும் கடன் பிரச்சனை நீங்கும் நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும் வராகி வழிபாடு

எளிமையான இந்த வழிமுறைகளை நாமும் பின்பற்றி நம்முடைய வீட்டில் தெய்வ சக்தியை அதிகரித்து நலமுடன் வாழ்வோம்.

சற்று முன்