- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும் வராகி வழிபாடு

நிறைவேறாத வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும் வராகி வழிபாடு

- Advertisement -

நீண்ட நாட்களாக நாம் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் அதனால் இந்த காரியம் நடைபெறும் என்று முயற்சி செய்து கொண்டிருப்போம். அது ஏதோ ஒரு சூழ்நிலையில் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அல்லது தடைகள் வந்து தடைப்பட்டு நின்றிருக்கும். அப்படிப்பட்ட காரியங்கள் நடைபெறுவதற்கும் நம்முடைய நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கும் வராகி அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக வராகி அம்மனை நாம் வழிபடும் பொழுது வராகி அம்மனின் அருளால் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகிவிடும். நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பலரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட வராகி அம்மனிடம் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் கோரிக்கையை வேண்டுதலாக வைத்து நம்முடைய வீட்டிலேயே நாம் வழிபட்டோம் என்றால் அந்த வேண்டுதலை நிறைவேற்றி தருவாள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். அதாவது ஐந்து முப்பது மணிக்குள் தான் செய்ய வேண்டும். எவ்வளவு நாட்கள் அந்த வேண்டுதல் நடைபெறாமல் இருக்கிறதோ? அதற்கேற்றார் போல் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை நீங்கள் செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பாக முறையில் வீட்டில் வராகி அம்மனின் படம் இருக்க வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் ஆரம்பிக்கலாம். முடிந்தவரை வெள்ளிக்கிழமையில் ஆரம்பிப்பது சிறப்பு.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டில் பூஜை அறையில் இருக்கக்கூடிய வராகி அம்மனின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பிறகு அம்மனுக்கு நெய்வேத்தியமாக உலர் பழங்கள், பானகம், பால், தண்ணீர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துவிட்டு ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு வராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தட்டில் இரண்டு வாழைப்பழத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக நம்முடைய உள்ளங்கையில் இரண்டு பனைவெல்லத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் ஒன்று என்ற வீதத்தில் இரண்டு பனைவெல்லத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வராகி அம்மனுக்கு முன்பாக அமர்ந்து அம்மனை பார்த்தவாறு உங்களுடைய நீண்ட நாள் வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை நீங்கள் மனதார கூறவேண்டும். இப்படி கூறிவிட்டு கையில் இருக்கக்கூடிய பனைவெல்லத்தை தட்டில் இருக்கும் வாழைப்பழத் தோலை உரித்து அந்த வாழைப்பழத்திற்குள் புதைத்து மறுபடியும் தோலை மூடி வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு வாழைப்பழத்திற்கும் ஒவ்வொரு பனைவெல்லம் என்று இரண்டு வாழைப்பழத்திற்கு இரண்டு பனைவெல்லத்தை வைத்து மூடி விட வேண்டும். இப்படி நீங்கள் வராகி அம்மனை வழிபாடு செய்து விட்டு அந்த காரியம் நடப்பதற்குரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த வாழைப்பழம் அன்றைய தினம் முழுவதும் வராகி அம்மனுக்கு முன்பாகவே இருக்கட்டும்.

மறுநாள் காலையில் பழைய வாழைப்பழத்தை எடுத்து தனியாக வைத்து விடுங்கள். இதே முறையில் மறுபடியும் வராகி அம்மனுக்கு இரண்டு வாழைப்பழத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பழைய வாழைப்பழத்தை பசு மாட்டிற்கு தானமாக தந்து விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக வழிபாடு செய்து கொண்டே உங்களுடைய காரியத்தை நீங்கள் செய்து வந்தால் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகிய அந்த காரியம் விரைவிலேயே நடைபெறும். முயற்சிகள் எதுவும் செய்யாமல் இந்த வழிபாட்டை செய்தால் எந்த வித பலனும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் ஏற்பட சிவ வழிபாடு

வராகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான இந்த பனைவெல்லத்தை இந்த முறையில் வைத்து வழிபடுவதன் மூலம் வராகி அம்மன் அருளால் விரைவிலேயே நம்முடைய வேண்டுதல் நிறைவேறும்.

சற்று முன்