தினமும் திருப்பதி பாலாஜியை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்கள் வீட்டில், பஞ்சம் இருக்காது. இது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் சனிக்கிழமை பெருமாளை நினைத்து பச்சை கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டில், செல்வ வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. பச்சைக் கற்பூரம் என்றாலே அதற்கு சொந்தக்காரர் பெருமாள் தான்.
பெருமாள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தானாக வந்து வாசம் செய்ய தொடங்கி விடுவாள். உங்கள் வீட்டு பஞ்சத்தைப் போக்கும் அந்த பரிகாரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
பஞ்சம் போக்கும் பச்சை கற்பூர பரிகாரம்
சனிக்கிழமை காலை சூரிய உதயம் ஆவதற்கு முன்பு எழுந்து வாசலில் கோலம் போட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். 6 மணி அளவில் காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் தேவையான அளவு பச்சை கற்பூரத்தை போட்டு நுணுக்கி கொள்ளுங்கள்.
இதில் கொஞ்சமாக ஏலக்காய் பொடி, கிராம்பு பொடியை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பொருட்களை எல்லாம் உள்ளங்கைகளில் வைத்து சின்ன சின்ன உருண்டையாக தயார் செய்து கொள்ளலாம். சின்ன கோலி குண்டு சைஸில் உருண்டைகள் பிடித்தால் போதும். இந்த உருண்டைகளை எல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு பெருமாளின் பாதத்தில் வைத்துவிட்டு ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை சொல்லி வீட்டில் இருக்கும் பஞ்சம் தீர வேண்டும்.
கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி தீர்த்தம் வையுங்கள். பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த உருண்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பணம் வைக்கும் பெட்டியில் இந்த உருண்டையை கொண்டு போய் வைக்க வேண்டும்.
பெருமாளே இந்த பீரோவில் நிறைய பணம் கட்டு கட்டாக சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பச்சை கற்பூரத்தை கொண்டு போய் பீரோவில் வையுங்கள். சமையலறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் இந்த உருண்டையை வைக்க வேண்டும். எங்கள் வீட்டில் என்றைக்கும் அரிசி பருப்பு தன தானியத்திற்கு பஞ்சமே இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு சமையலறையில் அந்த உருண்டையை வையுங்கள்.
படுக்கையறையிலும் இதே போல ஒரு உருண்டையை வைக்கலாம். வரவேற்பு அறையில் வைக்கலாம். பூஜை அறையில் வைக்கலாம். உங்களுக்கு எத்தனை உருண்டை தேவையோ அத்தனை தயார் செய்து வைத்து, பூஜை செய்து வீட்டில் எல்லா இடத்திலும் இந்த பச்சை கற்பூரம் வாசம் நிரம்பி வழியும்படி பார்த்துக் கொண்டால், அந்த திருப்பதி பெருமாளின் அருள் ஆசியும் உங்கள் வீட்டில் நிரம்பி வழியும் என்பது நம்பிக்கை. இந்த பச்சை கற்பூரம் கொஞ்ச நாளில் கரைய தொடங்கி விடும்.
இதையும் படிக்கலாமே: தங்க நகை சேரவும் அடகு நகையை திருப்பவும் வழிபாடு
முழுசாக கரைந்து முடிந்த பிறகு, வாசம் எல்லாம் நீங்கிய பிறகு புதுசாக இதே போல உருண்டைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாசம் உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். வீட்டில் எப்போதும் தெய்வீக நறுமணம் இருந்து கொண்டே இருக்கும். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.