- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் உயர வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

செல்வ வளம் உயர வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

வளர்பிறை சதுருத்தியில் விநாயகரை வழிபாடு செய்தால் உங்களுடைய செல்வ வளம் உயரும். வளர்பிறையில் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக எப்படி வளர்ந்து கொண்டே சென்று முழு நிலவாக பிரகாசமாக ஜொலிக்கின்றதோ, அதேபோல நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக  வாழ்க்கையில், செல்வ வளத்தில் உயர்ந்து நல்ல செல்வந்தர்களாக பிரகாசமாக ஜொலிக்க தொடங்கி விடுவீர்கள். இதற்கு இன்றைய தினம், ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

செல்வ வளம் உயர வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

இன்று மாலை விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். செல்லும்போது ஒரு கட்டு அருகம்புல், 1 ரூபாய் நாணயம் இந்த இரண்டு பொருட்களையும் எடுத்துச் செல்லுங்கள். அர்ச்சகரிடம் கொடுத்து இதை விநாயகரை பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். தேங்காய் உடைத்து, வாழைப்பழம், பூ, வெற்றிலை பாக்கு வைத்து வழக்கம் போல அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அர்ச்சனை முடிந்தவுடன் பிள்ளையாரை மூன்று முறை வலம் வர வேண்டும். அதன் பிறகு அர்ச்சகரிடம் சென்று பிள்ளையாரது பாதத்தில் இருக்கும் அருகம்புல்லையும், நீங்கள் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளவும். நீங்கள் கொடுத்த அருகம்புல்லை தான் திரும்பவும் வாங்க வேண்டும் இந்த அவசியமில்லை. பிள்ளையாருக்கு மாலை போட்டு இருப்பாங்க. பிள்ளையாரிடம் வேறு ஏதாவது அருகம்புல் இருக்கும்.

அதிலிருந்து கொஞ்சமாக அருகம்புல் பிரசாதம் வாங்கிக்கோங்க. கூட ஒரு ரூபாயும் இருக்கட்டும். இந்த இரண்டு பொருளையும் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு விநாயகரது கோவிலிலேயே சிறிது நேரம் அமர்ந்து என்னுடைய வருமானம் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும். வருமானத்திற்கு தடையாக இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் விலக வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து இந்த இரண்டு பொருளையும் அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து குலதெய்வத்தை வேண்டி உங்கள் வீட்டு பீரோவில் வையுங்கள் போதும்.

- Advertisement -

அவ்வளவுதான் உங்கள் பண பிரச்சனை தீரும். செல்வ வளம் கொழிக்கும். கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கும். இதோடு சேர்த்து வீட்டில் நீங்கள் இன்னொரு வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். சின்னதாக மண் அகல் விளக்கில், விளக்கு ஏற்றும் திரியோடு, வெள்ளருக்கன் திரியை ஒன்றாக இணைத்து தீபம் ஏற்றினால் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை.

இதேபோல ஒரு விளக்கை கோவிலுக்கு செல்லும்போது பிள்ளையார்கோவிலிலும் ஏற்றலாம். இந்த விளக்கை வளர்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி திதி அன்று ஏற்றினால் உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும். விநாயகர் அருள் ஆசி முழுமையாக கிடைக்கும். காரியத்தடை விலகும். இந்த வளர்பிறை சதுர்த்தி திதியில் இந்த வழிபாட்டை செய்வது எல்லோருக்கும் நல்லது.

இதையும் படிக்கலாமே: தவறான பாதையில் செல்லும் கணவரை சரி செய்ய பரிகாரம்.

நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்