இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் வீட்டில் பஞ்சம் என்பது ஒருபோதும் இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் வரக்கூடிய இந்த ஏகாதேசையை ஆஷாட ஏகாதேசி என்றும் சொல்லுவார்கள். இத்தனை சிறப்பு அம்சம் மிக்க இங்க இந்த தேவசயனி ஏகாதேசியில் பெருமாள் துயில் கொள்ள செல்வதாக ஒரு ஐதீகம் இருக்கிறது.
அதாவது ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதம் வரைக்கும் பெருமாள் உறக்க நிலையில் இருப்பார். பள்ளிகொண்ட பெருமாளுக்கு இந்த ஏகாதேசி ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த ஏகாதேசி தினத்தில் விரதமிருந்து பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்தால் நீங்கள் வேண்டிய வரங்களை சுலபமாக பெற முடியும் வீட்டில் செல்வ வளம் கொழிக்கும்.
ஆடி மாதம் ஏகாதசி வழிபாடு
17.7.2024 புதன்கிழமை அன்று ஏகாதசி திதி விரதம் இருக்க வேண்டும். ஆனால் 16ஆம் தேதி மாலை 8:33 மணிக்கு ஏகாதசி திதி பிறந்து விடுகிறது. 17ஆம் தேதி இரவு 9:20 மணி வரை ஏகாதசி திதியானது இருக்கிறது. விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் 17ஆம் தேதி புதன்கிழமை உங்களுடைய விரதத்தை மேற்கொள்ளலாம்.
நாளைய தினம் பெருமாளுடைய ஏகாதசி விரதத்தை எப்படி இருப்பது. அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விரதத்தை தொடங்குங்கள். இந்த ஏகாதசி முழுவதும் வெறும் துளசி தீர்த்தத்தை பருகி விட்டு பெருமாளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக வேலைக்கு போகக்கூடாது உங்களது அன்றாட வேலையை செய்யக்கூடாது என்பது அர்த்தம் கிடையாது.
வேலை செய்தது போக மீதம் இருக்கும் நேரத்தில் உங்கள் மனம் முழுவதும் அந்த பெருமாள் நிறைந்திருக்க வேண்டும். கோவிந்தா கோவிந்தா, நாராயணா, கோபாலா, வாசுதேவா இப்படி உங்களுக்கு எந்த பெருமாள் நாமத்தை உச்சரிக்க பிடிக்குமோ அந்த பெருமாளது நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.
துளசி தீர்த்தம் எவ்வளவு வேண்டுமென்றாலும் நீங்கள் பருகி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். இப்படி முழு விரதமும் உங்களால் இருக்க முடியாது வெறும் தண்ணீரை பருக்கி இந்த நாளை கடந்து செல்வதில் சிரமம் இருக்கிறது. உடல் சூழ்நிலை சரியில்லை என்பவர்கள் உங்களுக்கு தேவையான பழம் பால் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டும் விரதம் இருக்கலாம்.
மருந்து மாத்திரை சாப்பிடபவர்கள் உங்களுடைய உணவை நீங்கள் தியாகம் செய்ய வேண்டாம். எப்போதும் போல சாப்பிட்டே பெருமாள் நாமத்தை உச்சரித்தாலும் உங்களுக்கு உண்டான பலன் நிச்சயம் கிடைக்கும். இப்படி ஏகாதசி நாளில் விரதம் இருந்து மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலைகளை சாத்தி பெருமாளை மனம் உருகி வேண்டிக் கொள்ளவும். நாளைய தினம் மகாலட்சுமி தாயார் முன்பு சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை செய்யுங்கள். மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக கிடைக்கும்.
பொதுவாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று தான் காலை நேரத்தில் விரதத்தை முடிப்பார்கள். அதாவது ஜூலை 18-ஆம் தேதி துவா தசி திதியானது இருக்கின்றது. இந்த துவாதசியை வாசுதேவ துவாதசி என்று சொல்லுவார்கள். இந்த துவா தசி திதியில் காலை வேளையில் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சமைத்து இறைவனுக்கு படையல் போட்டு அந்த சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டு உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கொடுத்த கடனை திரும்ப பெற பரிகாரம்
கட்டாயமாக இந்த உணவில் நெல்லிக்காயை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். இப்படி மேல் சொன்ன முறைப்படி பெருமாளை ஆடி மாத ஏகாதசி அன்று விரதமர்ந்து வழிபாடு செய்தால் உங்களுடைய வீட்டில் பஞ்சமே இருக்காது. வாழ்கின்ற காலத்தில் பஞ்சமில்லாமல் வாழ வேண்டும். வாழ்ந்து முடித்தவுடன் அந்த பெருமாளின் பாதத்தை சரணடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழிபாடு இந்த ஏகாதசி வழிபாடுதான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.