- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரி தொல்லை விலக வாராஹி வழிபாடு

எதிரி தொல்லை விலக வாராஹி வழிபாடு

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை விட கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். நல்லவர்கள் என்று நான் நெருங்கி பழகவோம். கடைசியில் அவர்கள் நம்மை முதுகில் குத்தி விட்டு செல்வார்கள். இப்படிப்பட்ட எதிரிகள் உங்களுடைய வாழ்க்கையில் இருந்தால் உங்களுக்கே தெரியாமல் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனையை கொடுத்து, சூழ்ச்சியில் மறைந்திருந்தாலும், அவர்களிடமிருந்து உங்களை வராகித்தாய் காப்பாற்றுவாள்.

நேருக்கு நேராக நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் எதிரியாக இருந்தாலும் அவர்களை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டால், அந்த எதிரி உங்கள் பக்கம் வராமல் இருக்கவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும்.

- Advertisement -

இது ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம். வராகி அம்பாளை வழிபாடு செய்யவும் இந்த மாதம் மிக மிக உகந்த மாதம் தான். நாளைய தேய்பிறை பஞ்சமி திதி, எதிரிகள் ஒழிய இந்த நாளில் கூட நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளை இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த வழிபாட்டை செய்து எதிரி விலக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

எதிரிகள் விலக வாராஹி வழிபாடு

கொஞ்சமாக பச்சரிசி சாதம் வடித்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் வேக வைத்த வெள்ளைப் பூசணியை போட்டு கலந்து வாராகித் தாய்க்கு நெய்வேத்தியமாக வைத்து கண்ணுக்குத் தெரிந்த எதிரி, கண்ணுக்குத் தெரியாத எதிரி யாராக இருந்தாலும் என் வாழ்க்கையில் குறிக்கிடக் கூடாது. எதிரிகளால் என்னுடைய வாழ்க்கையில் தோல்வி ஏற்படக் கூடாது. ரொம்ப ரொம்ப பெரிய எதிரிகள் எல்லாம் ஏவல் பில்லி சூனியம் வரை செல்வார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலும் எங்களுடைய குடும்பத்தை தாக்க கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டால் உங்கள் குடும்பத்திற்கு வரும் எதிரி பிரச்சனைகள் விலகும். உங்களை வாழவே விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உங்களைப் பற்றிய நினைப்பை மறந்து, வேறு பாதையில் செல்வார்கள்.

இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் எதிரியின் உயிருக்கு, எதிரியின் குடும்பத்திற்கோ எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது. எதிரி எந்த ஒரு சத்தமும் இல்லாமல் உங்களை விட்டு நிரந்தரமாக விலகி வேறு பாதையில் சென்று விடுவான். அவ்வளவு தான். இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம்.

- Advertisement -

வாராகி வழிபாடு நம்மில் பல பேருக்கு தெரியும். வாராகி வழிபாடு என்றாலே மாலை 6:30 மணிக்கு மேல் செய்ய வேண்டிய வழிபாடு. வீட்டில் வராகியின் திருவுருவப்படமே இல்லை என்றாலும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த அம்பாளை மனம் உருகி நினைத்து இந்த நெய்வேத்தியத்தை வைத்து வாராகியை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் நிச்சயம் உங்களுடைய எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: பிரார்த்தனை நிறைவேற குலதெய்வ வழிபாடு

வழிபாட்டை முடித்துவிட்டு அம்பாளுக்கு பிரசாதமாக வைத்த அந்த உணவை வீட்டில் இருப்பவர்கள் பகிர்ந்து உண்ணலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்