- Advertisement -

பண கவலை தீர பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கை எந்த அளவிற்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு பணவரவு என்பது ஏற்பட வேண்டும். பணத்தினால் தான் ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாரித்தாலும் பலருக்கும் அந்த பணம் தங்காமல் போய்விடுகிறது. அப்படி தங்காமல் பணம் செல்வதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். பணவரவு என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் தான் வந்த பணம் தங்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் நாம் சம்பாதித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் அல்லவா! அப்படி பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மகாலட்சுமி தாயாரை நினைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண கவலை தீர பரிகாரம்

ஒரு சில சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பணவரவு என்பது வற்றாமல் இருக்கும். எப்பொழுதும் அவர்களுடைய கையில் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும். அவர்களை பார்க்கும் பொழுது நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் செய்யக்கூடிய சில பரிகாரங்கள் தான். எந்திர தந்திர வழிபாடுகள் என்று இருக்கின்றன. எந்திரம் என்றால் நமக்கு தெரியும் செம்பு தகட்டில் எந்திரம் வரைந்த அதை வைத்து வழிபாடு செய்வது. தந்திர வழிபாடு என்பது கிடைக்காத அரிய வகையான பொருட்களை வைத்து செய்யக்கூடிய வழிபாடு. இந்த பதிவில் நாம் தந்திர வழிப்பாட்டை தான் செய்கிறோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது போஜபத்ரா. இது ஒருவகை இலையில் இருந்து தயாரிக்க கூடிய பேப்பர். இந்த பேப்பர் கிடைப்பது என்பது மிகவும் அரிது. ஆன்லைன் ஷாப்பிங் என்று கூறக்கூடிய அமேசான் போன்ற இணைய தளத்தில் சென்று இதை தேடி வாங்கலாம். இதை வாங்கிய பிறகு வளர்பிறை வெள்ளிக்கிழமை போல ஒரு நாளை தேர்வு செய்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதல் நாளே சுத்தமான செந்தூரத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் மாதுளம் பழ குச்சி வேண்டும். அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பர் மிகவும் மெல்லியதாக இருக்கும் என்பதால் இதில் நாம் எழுதப் போவதை கிழியாத வண்ணம் பார்த்து எழுதிக் கொள்ள வேண்டும். இதற்காக நாம் மாதுளம் பழம் குச்சியின் நுனியில் பஞ்சை சுற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு எப்பொழுதும் போல் பூஜைகள் செய்த பிறகு சுக்கிர ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பேப்பரை எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாதுளம் பழ குச்சியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். செந்தூரத்தில் சுத்தமான பன்னீரையோ அல்லது கங்காஜலத்தையோ கலந்து அதில் நாம் இந்த குச்சியைத் தொட்டு இந்த பேப்பரில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும்.

இப்படி வரைந்து முடித்த பிறகு இதை அப்படியே மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்துவிட்டு இரண்டு நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு தேன் அல்லது பசு நெய்யை நெய்வேதியமாக வைத்து பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், பணம் நிலையாக தங்க வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கும் மஹாலக்ஷ்மி தாயாருக்கும் பச்சை கற்பூரத்தால் ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமைய ஏற்ற வேண்டிய தீபம்

இப்படி தினமும் இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நாம் கற்பூர ஆராதனை காட்டி வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய பணரீதியான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். சம்பாதித்த பணம் சேமிப்பாக உயரும்.

சற்று முன்