ஒருவருடைய உழைப்பிற்கு காரணமாக திகழ்வது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். எண்ணம் எப்படி இருந்தாலும் அதற்குரிய உழைப்பை எவ்வளவு கடினமாக செய்தாலும் அந்த பணத்தை கையில் வாங்குவதற்கு என்று யோகம் வேண்டும். பலரும் இன்றைய காலத்தில் பணத்தை வாங்காமலேயே கண்ணில் பார்க்காமலேயே உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எவ்வளவு விசுவாசமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலனை பெற முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
அதே சமயம் மற்றொரு புறத்தில் எந்த வேலையுமே செய்யாமல் அமைதியாக வீட்டில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கையில் பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது மகாலட்சுமியின் அருளே. அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சுமமான வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வரங்களைத் தரும் வரலட்சுமி வீட்டிற்கு வர
ஒருவர் ஒரு சிறிய செயலை செய்வதன் மூலம் அவருக்கு பல வகைகளில் நன்மைகள் ஏற்படும் என்னும் பட்சத்தில் அவர் அந்த சிறிய செயலை செய்வதற்கு எந்தவித தயக்கமும் காட்ட மாட்டார். நம்மை அறியாமலேயே நாம் செய்யக்கூடிய அந்த சிறிய சூட்சமமான விஷயமும் நம் வாழ்க்கையை திருப்பி போடும் அளவிற்கு மாற்றிவிடும். இந்த சூட்சமமான வழிமுறையை தான் நாம் தாந்த்ரீக பரிகாரம் என்று கூறுகிறோம். கேட்கும்பொழுது இவ்வளவுதானா என்று தோன்றும். ஆனால் அதை செய்யும் பொழுது தான் அதற்குரிய பலன் என்ன என்பதை நம்மால் உணர முடியும். அந்த வகையில் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிமுறையை பற்றி தான் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி தாயார் என்பவள் நிலையாக ஒரு இடத்தில் இருக்கக் கூடியவள் அல்ல. அஷ்டலஷ்மியும் ஒரு சேர இருக்க கூடிய மகாலட்சுமிக்கு மொத்தம் எட்டு கால்கள் என்றும் அவளை சஞ்சலா என்றும் அழைப்பார்கள். சஞ்சலா என்றால் ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்க மாட்டாள் என்பது தான் அதன் பொருள். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை நாம் ஒருமுறை வீட்டிற்கு அழைத்தோம் என்றால் நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடுவாள் என்று நினைப்பது தவறான ஒன்று.
தினமும் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபட்டு தினமும் நம் வீட்டிற்கு அழைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவள் வீட்டை விட்டு சென்றாலும் செல்லாவிட்டாலும் நம் வீட்டில் அவளுடைய கருணை பார்வை என்பது இருக்கும். அப்படி அவளின் கருணை பார்வை இருந்துவிட்டாலே நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். எந்தவித தடைகளும் உண்டாகாது. குடும்பத்தில் நல்ல சந்தோஷமான மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு தாந்திரீக பரிகாரத்தை தெரிந்து கொள்வோம்.
இதற்காக நாம் பெரிதாக எதுவும் செலவு செய்ய வேண்டியது இல்லை. ஒவ்வொரு நாளும் காலையில் தூங்கி எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு நம்முடைய வீட்டு நிலை வாசலை திறப்போம் அல்லவா? அவ்வாறு திறக்கும் பொழுது நாம் செய்ய வேண்டிய ஒரு வழிமுறைதான். இது இரண்டு வாசல்கள் இருக்கும் வீடாக இருக்கும் பட்சத்தில் கொள்ளை புறத்தில் இருக்கக்கூடிய வாசலைதான் முதலில் திறக்க வேண்டும். இப்படி திறப்பதன் மூலம் இரவு முழுவதும் வீட்டிற்குள் இருந்த எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் வெளியே சென்று விடும்.
இவ்வாறு ஐந்து நிமிடம் திறந்து வைத்துவிட்டு பிறகு கதவை மூடிவிட்டு தலைவாசலின் கதவை திறக்க வேண்டும். அப்படி கதவை திறக்கும் பொழுது “வரலட்சுமியே வருக வருக” என்று மூன்று முறை கூற வேண்டும். அவ்வாறு கூறும் பொழுது நம்முடைய வாசலில் மகாலட்சுமி தாயார் நிற்கிறார் அவரை நாம் உள்ளே அழைக்கிறோம் என்று மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்குள் வந்து நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்குவார்.
இதையும் படிக்கலாமே:வேண்டுதலை நிறைவேற்றும் மகா சங்கடஹர சதுர்த்தி
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்து பாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நன்மைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் தங்களுடைய வாழ்நாள் முடியும் வரை இப்படி கூறி மகாலட்சுமி தாயாரை நித்திய வாசம் செய்ய வைக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.