நாளைய தினம் ஆவணி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி. இதை சில பேர் சூரிய சப்தமி, ரதசப்தமி என்றும் சொல்லுவார்கள். இந்த நாள் முழுக்க முழுக்க சூரிய பகவானுக்கு உரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் சூரிய பகவானை வழிபாடு செய்து, நீர் நிலைகளில் குளித்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் சாபம், முன்னோர்கள் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
நாளைய தினம் நம்முடைய வாழ்வு சிறக்க எந்த வழிபாட்டு முறைகளை சுலபமாக செய்தால் நல்லது நடக்கும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பானு சப்தமி வழிபாடு
நாளை அனைவரும் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்து விட வேண்டும். சூரியன் உதயமாகும் போது ‘ஓம் சூரிய தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி சூரிய பகவானுக்கு நமஸ்காரம் செய்து ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து சூரிய பகவானுக்கு முன்பாக ஊற்றி, நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.
இந்த வழிபாட்டை யாரெல்லாம் நாளைய தினம் செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் சூரிய பகவானின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும். வேலையில், தொழிலில் இருந்து வந்த தோல்விகள் எல்லாம் வெற்றியாக மாறும். வாழ்க்கையில் பல முன்னேற்றத்திற்கு இந்த வழிபாடு வழி வகுக்கும். மறக்காமல் நாளைய தினம் இதை செய்து விடுங்கள்.
இதோடு சேர்த்து நாளைய தினம் செய்ய வேண்டிய முக்கியமான பிள்ளையார் வழிபாடும் இருக்கிறது. நாளை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். எந்த கோவிலாக இருந்தாலும் பிள்ளையார் இருப்பார். இருந்தாலும் நாளைய தினம் சிவன் கோவிலில் இருக்கக்கூடிய பிள்ளையாரை வழிபடுவது தான் சிறப்பு.
இப்படி சிவன் கோவில் இருக்கும் பிள்ளையாரை வழிபாடு செய்ய செல்லும் போது, 7 சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தி, அருகம்புல் மாலை வாங்கி செல்ல வேண்டும். இந்த இரண்டு பொருளையும் பிள்ளையாருக்கு கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பிள்ளையாரை மனமுருகி வழிபாடு செய்யுங்கள்.
பிறகு சிவபெருமானையும் வழிபாடு செய்து விட்டு, வீடு திரும்பவும். நாளைய தினம் இந்த வழிபாட்டை செய்தீர்கள் என்றால் பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பித்ருக்களின் சாபங்கள் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் ராகு கேது பகவானால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் தீரும்.
இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் ஏலக்காய் மாலை
சூரிய பகவானின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். எளிமையான இந்த வழிபாட்டிற்கு பின்னால் பல ஜோதிட சாஸ்திர ரகசியங்கள் இருக்கிறது. அதையெல்லாம் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த வழிபாடு உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றி விடும். நம்பிக்கையோடு இதை செய்யுங்கள். நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.