நாம எல்லாருக்கும் தெரியும். நவகிரகங்களில் செவ்வாய் பகவான் பூமிக்கு உரியவன் என்பது. அதுமட்டுமல்லாமல் சகோதரத்துவம் பலம் பெற வேண்டும் என்றாலும் இந்த செவ்வாய் பகவானின் அருள் தேவை. வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள், வீடு விற்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள், நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வீடு சம்பந்தப்பட்ட, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள், கடன் வாங்கிவிட்டு அவதிப்படுபவர்கள் எல்லோருமே நாளைய தினம் செவ்வாய் பகவானை வழிபாடு செய்யுங்கள்.
உங்களுடைய பிரச்சினைகள் தீரும். நாளைய தினம் செவ்வாய் பகவான் அவதரித்த நாள், இதுதான் அங்காரக ஜெயந்தி என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் செவ்வாய் பகவானை சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படிக்க தெரிந்து கொள்வோமா.
அங்காரக ஜெயந்தி வழிபாடு
நாளை உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் நவகிரக கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு செவ்வாய் பகவான் இருப்பார். அவருக்கு 2 வெற்றிலை, 2 பாக்கு, 2 செவ்வாழை பழங்கள் வாங்கி தேங்காய் உடைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளவும். முடிந்தால் சிவப்பு நிற வஸ்திரம் வாங்கி தானம் கொடுக்கலாம். நவகிரகங்கள் சன்னிதானத்திற்கு முன்பாக 9 விளக்குகளை ஏற்றி வைத்து பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
வழிபாடு இவ்வளவுதான் நவகிரக சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து ‘ஓம் அங்காரகனே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுவது மிக மிக சிறப்பு இந்த வழிபாடு செவ்வாய் பகவானுக்கு உரியது.
இது தவிர செவ்வாய் பகவானை பலப்படுத்திக் கொள்ள நாம் சில கடவுளை வழிபாடு செய்யலாம். துர்க்கை அம்மன், நரசிம்மர், பிரத்தியங்கிரா தேவி, வாராஹி இப்படிப்பட்ட தெய்வங்களை வணங்கும்போது செவ்வாய் பகவானால் நமக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறையும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது.
நாளைய தினம் இப்படிப்பட்ட தெய்வங்களை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய முன்னேற்ற தடைகள் விலகும். நிறைய பேருக்கு செவ்வாய் பகவானால் திருமண தடை இருக்கும் குழந்தை பேரு கிடைக்காமல் கூட இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் நாளை நீங்கள் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.
இதையும் படிக்கலாமே: காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
செவ்வாய் பகவான் அருளைப் பெற செவ்வாய் பகவானோடு சேர்த்து மேல் சொன்ன உக்கிர தெய்வ வழிபாடு உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். நாளை அங்கார ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்து இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.