குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிபாடாக கருதப்படுகிறது. குலதெய்வத்தின் அருளால்தான் நம் வாழ்வில் ஒவ்வொரு நல்ல விஷயங்களும் நடைபெறுகிறது என்பது பலரும் அனுபவ பூர்வமாக கண்ட உண்மை. அதனால்தான் இன்றைய காலத்தில் குலதெய்வ வழிபாடு என்பது சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை நினைத்து நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது. அந்த வகையில் காரிய வெற்றி ஏற்படவும் தடைகள் தவிடு பொடியாகவும் குலதெய்வத்தை நினைத்து ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தடைகளை தகர்த்தெறியும் குலதெய்வ தீபம்
பொதுவாகவே மாதத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாதாமாதம் போக முடியாத பட்சத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் தினமும் வீட்டில் விளக்கேற்றும் பொழுது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் குலதெய்வ அருள் நமக்கும் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் நாம் வேண்டிய அனைத்து விதமான நன்மைகளை பெற முடியும். அதே சமயம் நமக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாமல் குலதெய்வம் நம்மை காத்து ரட்சிக்கும். அப்படிப்பட்ட குலதெய்வத்தை நினைத்து எந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் மேற்கொள்வது என்பது மிகவும் சிறப்பு. இரண்டு தினங்களிலும் மேற்கொள்ளலாம் அல்லது ஏதாவது ஒரு தினத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு நாம் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயன்றவர்கள் குலதெய்வ கோவிலில் இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த தீபத்தை நாம் ஏற்றுவதற்கு நமக்கு தேங்காய் வேண்டும். நல்ல தேங்காயாக பார்த்து பேரம் பேசாமல் வாங்கி அதை சரிபாதியாக உடைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சளை தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தேங்காயில் தீபம் ஏற்றுவதற்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும். வாழைத்தண்டு திரி மற்றும் இலவம் பஞ்சு திரி இந்த இரண்டு திரிகளையும் ஒன்றாக இணைத்து தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதற்கு முன்பாக ஒரு தட்டு அல்லது வாழை இலையில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் தேங்காயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி இலவம்பஞ்சு மற்றும் வாழைத்தண்டு திரியை ஒன்றாக இணைத்துக்கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த இரண்டு தேங்காய்க்கு நடுவில் ஒரு செம்பருத்திப் பூவை வைக்க வேண்டும்.
இப்படி நாம் தீபமேற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி பெற முடியவில்லை, காரிய தடை இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த தீபத்தை குலதெய்வத்திற்கு ஏற்றி பாருங்கள். விரைவிலேயே வெற்றிகள் உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே:அற்புதங்களை நிகழ்த்தும் அழகன் முருகன் மந்திரம்
குலதெய்வ வழிபாட்டை முழு நம்பிக்கை உடன் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் குலதெய்வ அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதே சமயம் இந்த தீபத்தையும் ஏற்றி நாம் வழிபாடு செய்ய குலதெய்வத்தில் அருளால் தடைகள் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.