- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடையில்லா பண வரவை பெற பரிகாரம்

தடையில்லா பண வரவை பெற பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு சிலர் கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார். இன்னும் சிலர் எளிதான வேலைகளை செய்து பணத்தை சம்பாதிப்பார். ஒரு சிலர் பிறரிடம் இருந்து நியாயமான முறையில் வரவேண்டிய பணத்திற்காக போராடுவார். இன்னும் சிலர் நியாயமற்ற முறையில் பணத்தை ஏமாற்றி சம்பாதிப்பார். எதுவாக இருந்தாலும் பணத்தை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருடைய எண்ணம் ஆகும். அந்த வகையில் நியாயமான முறையில் பணவரவு அதிகரிக்கவும் நமக்கு வரவேண்டிய பணம் நம்மை வந்து சேரவும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

தடையில்லா பண வரவை பெற பரிகாரம்

பண வரவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொள்வதுண்டு. இந்த வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலர் பரிகாரங்களையும் செய்வார்கள். அப்படிப்பட்ட பரிகாரங்களில் ஒன்றாக தான் இந்த பரிகாரமும் திகழ்கிறது. இந்த பரிகாரத்தை நம்முடைய வீட்டில் நாம் செய்தாலே போதும். நமக்கு வரவேண்டிய பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். பணவரவு அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரே ஒரு எலுமிச்சம் பழம் வேண்டும், நெய் வேண்டும், இரண்டு கிராம்பு வேண்டும், பஞ்சு திரி வேண்டும். இந்த பரிகாரத்தை நம்முடைய வீட்டிற்குள் செய்யக்கூடாது. நிலைவாசலுக்கு வெளியே செய்யலாம் அல்லது வீட்டில் துளசி செடி வைத்து வளர்ப்பவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் அந்த துளசி செடிக்கு அருகில் செய்யலாம். இப்படி வீட்டில் செய்யும் வசதி இல்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஒரு நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். இதை இரண்டாக நறுக்கி இதன் சாரை மட்டும் பிரிந்து தனியாக கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு எலுமிச்சம் பழத்தோலை பிரட்டி அதற்கு ஐந்து இடங்களில் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாதி எலுமிச்சம் பழத்திற்கு மேலே மற்றொரு பாதி எலுமிச்சம்பழத்தை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அதற்குள் மொட்டு உடையாத இரண்டு கிராம்பை போட வேண்டும். பிறகு இதை நிலை வாசலுக்கு வெளியே வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அல்லது துளசி செடிக்கு இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம்.

- Advertisement -

காலையில் அல்லது மாலையில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த தீபத்தை ஏற்றலாம். தினமும் ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. தினமும் ஏற்றினால் நல்ல பலன் இருக்கும். வீட்டில் ஏற்ற விருப்பமில்லை என்பவர்களோ அல்லது இயலாத சூழ்நிலையில் இருப்பவர்களோ அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு சென்று அங்கு வீற்றிருக்கும் அம்மனின் சன்னதிக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கப்பெறும். இதனால் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:லட்சுமி கடாட்சம் மற்றும் குபேர அருளை பெற உதவும் தீபம்

மிகவும் எளிமையான இந்த பரிகார தீபத்தை நாமும் முழு நம்பிக்கையுடன் ஏற்றி வழிபடுவதன் மூலம் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்