கஷ்டத்திற்கு கைநீட்டி வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு மூச்சு திணறி வருபவர்களுக்காகவே இன்றைய அற்புதமான நாள் வந்திருக்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்கிழமை கடனை திருப்பி அடிக்க உகந்த நாள். இந்த நாளோடு இன்று மாலை அஷ்டமி திதியும் பிறக்கவிருக்கிறது.
நேரத்தின் அடிப்படையில் பார்த்தால் இன்று 24.9.24 மாலை 6:50 மணிக்கு அஷ்டமி திதி பிறந்து விடுகிறது. நாளை 25.9.24 புதன்கிழமை மாலை 6:55 மணி வரை அஷ்டமி திதியானது இருக்கிறது. கோவில்களில் எல்லாம் நாளைய தினம் தான் அஷ்டமி திதி வழிபாடு மேற்கொள்ளப்படும். நாளை மாலை கோவிலுக்கு சென்று விளக்கு போடுபவர்கள் போடலாம்.
ஆனால் இன்று இரவு பிறக்கக்கூடிய செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து இருக்கக்கூடிய இந்த தேய்பிறை அஷ்டமி திதியில் நாம் என்ன பரிகாரத்தை செய்தால், நம்முடைய கடன் பிரச்சனை தீரும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
தேய்பிறை அஷ்டமி திதி பரிகாரம்
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக நான்கு மிளகை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டுக்கு வெளியில் சென்று விட வேண்டும். இந்த மிளகை கையில் வைத்துக்கொண்டு காலபைரவரை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள் என்னுடைய கடன் சுமை கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு என்னை விட்டு விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த மிளகாய் கையோடு வைத்துக்கொண்டு, உங்கள் தலையை 8 முறை சுற்ற வேண்டும்.
கிளாக் வைஸ் சொல்லுவாங்க இல்லையா. அதுபோல சுத்திக்கோங்க. ‘கடன் என்னை விட்டு விலகி செல்ல வேண்டும்’ என்ற வார்த்தையை எட்டு முறை சொல்லியும் இந்த மிளகை தலையை சுற்றி போடலாம். அல்லது குறிப்பிட்ட கடன் பிரச்சினை உங்களுக்கு இருக்கும் அல்லவா. குறிப்பிட்ட நபரிடம், குறிப்பிட்ட வங்கியிடம் வாங்கிய கடன், அந்த நபரின் பெயரை சொல்லி, அந்த வங்கியின் பெயரை சொல்லி அந்த கடன் என்னை விட்டு விலக வேண்டும் அந்த கடனை செய்கிறோம் அடைக்க வேண்டும் என்றும் சொல்லலாம்.
தலையை சுற்றிய பிறகு உள்ளங்கைகளில் இருக்கும் நான்கு மிளகை, நான்கு திசைகளில் தூக்கி வீச வேண்டும். நான்கு மிளகையும் ஒவ்வொரு மிளகாக ஒவ்வொரு திசையில் கண்ணுக்கு தெரியாமல் தூக்கி வீசிவிடுங்கள். அந்த மிளகு எங்கு போய் விழுந்தாலும் தவறு கிடையாது. பிறகு வீட்டிற்குள் வந்து கை கால் முகம் கழுவிக்கொண்டு நீங்கள் தூங்க செல்லலாம். தனி வீடுகளில் இருப்பவர்கள் இதை நிலை வாசலுக்கு வெளியில் சென்று சுலபமாக செய்துவிடலாம்.
இரவு எல்லோரும் தூங்கி முடித்த பிறகு 10 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்களுக்கு இந்த பரிகாரத்தை செய்வதில் சில சிரமம் இருக்கும். நீங்கள் பால்கனி இருந்தால் அங்கு நின்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லையா மொட்டை மாடிக்கு போக முடியும் என்றால் மொட்டை மாடிக்கு சென்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட விநாயகர் வழிபாடு
நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை நாளை தினம் செய்து பாருங்கள். உங்களை பிடித்த கடன் பீடை தரித்திரம் வறுமை கண் திருஷ்டி கெட்ட சக்தி எல்லாம் உங்கள் உடம்பை விட்டு விலக இந்த சின்ன பரிகாரமே போதுமானது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.