நவராத்திரி ஆரம்பித்து மூன்றாவது நாள் வரப்போகிறது. ஒவ்வொரு நாளும் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும், எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும், எந்த பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும், எந்த மலர்களைக் கொண்ட அர்ச்சனை செய்ய வேண்டும், எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த வரிசையில் நவராத்திரியின் மூன்றாம் நாள் நாம் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு
நவராத்திரியின் மூன்றாம் நாள் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி சனிக்கிழமை வருகிறது, அன்றைய தினத்தில் நாம் அம்மனின் சுரூபமாக வணங்கக்கூடிய தெய்வங்கள் வாராகி அம்மன் மற்றும் சந்திரகாந்தா அம்மன். இவர்களை நாம் வழிபாடு செய்வதன் மூலம் எதிரிகள் தொல்லையிலிருந்து விலகலாம். நம் உடனே இருந்து கொண்டு நமக்கு துரோகம் செய்பவர்கள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கெட்டொழிந்து போவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 7:45 மணி முதல் 8 45 மணிக்குள் செய்யலாம் அல்லது காலை 10:45 மணியிலிருந்து 11:45 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை நேரத்தில் 5:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள் செய்யலாம். கொலு வைத்திருப்பவர்கள் காலையிலும் வழிபாடு செய்ய வேண்டும் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது என்பது மிகவும் சிறப்பு. அதோடு மட்டுமல்லாமல் மாலை நேரத்தில் சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து இந்த வழிபாட்டை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கும் நீல நிறத்திலான ஜாக்கெட் துணிகளை தருவது என்பது நல்ல பலனை தரும்.
அன்றைய தினம் நாம் வழிபாடு செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய மலர்கள் சம்மங்கி, செண்பக மலர் மற்றும் துளசி இலை. இது தவிர்த்து வாசனை மிகுந்த அனைத்து மலர்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக நெய்வேத்தியமாக காராமணி சுண்டலை வைக்க வேண்டும். இதோடு சர்க்கரை பொங்கல் மற்றும் கிழங்கு வகைகளை வைக்க வேண்டும். அடுத்ததாக அன்றைய தினத்தில் நாம் வைக்க வேண்டிய பழம் பலாப்பழம். இவை அனைத்தையும் நாம் தயார் செய்து வைத்துவிட்டு பின்வரும் மந்திரத்தை 21, 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் கூறி அம்மனை அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மனுக்கு புடவை சாற்றுவதாக இருக்கும் பட்சத்தில் நீல நிறத்தில் புடவையை சாற்றுவது என்பது மிகவும் நல்ல பலனை தரும்.
மந்திரம்:
ஓம் நமோ வாராஹி போற்றி
ஓம் நமோ சக்தி தாயே போற்றி
ஓம் நமோ ஜெகஜனனி தாயே போற்றி
ஓம் நமோ ஆதி வாராஹி தாயே போற்றி
ஓம் நமோ வாக் வாராஹி தாயே போற்றி
இதையும் படிக்கலாமே:புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு
இந்த முறையில் நவராத்திரியின் மூன்றாம் நாள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்கும். துரோகிகள் விலகி ஓடுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.