- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்யம் பெருக புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

ஐஸ்வர்யம் பெருக புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதம் என்பதே பெருமாளின் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்று அனைவருக்கும் தெரியும். அதிலும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பது அதீத பலனை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அதோடு சேர்த்து நரசிம்மருக்கு உகந்த ஸ்வாதி நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் நாம் எந்த முறையில் வழிபட்டால் பணரீதியான நன்மைகளும் ஐஸ்வர்யமும் பெருகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐஸ்வர்யம் பெருக புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் நரசிம்மர் அவதாரம். இவர் அவதரித்த நட்சத்திரம்தான் ஸ்வாதி நட்சத்திரம். அதனால் சுவாதி நட்சத்திரம் என்பது பெருமாளுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நரசிம்மரையோ அல்லது பெருமாளையோ வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இந்த மாதம் இந்த ஸ்வாதி நட்சத்திரம் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை வருகிறது. புரட்டாசி மாதம் மாதமும் சனிக்கிழமையும் சுவாதி நட்சத்திரம் என்று இவை மூன்றும் சேர்ந்து வரக்கூடிய அற்புதமான தினத்தில் பெருமாளை வழிபாடு செய்யும் முறை.

- Advertisement -

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சுவாதி நட்சத்திரம் என்பது இரவு 9:06 மணி வரை இருக்கிறது. அதனால் இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம். காலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5 மணியிலிருந்து 8:00 மணிக்குள் செய்யலாம். இந்த வழிபாட்டை பெருமாளின் ஆலயத்தில் செய்யலாம் வீட்டு பூஜை அறையிலும் செய்யலாம். பெருமாள் ஆலயத்தில் செய்வதாக இருந்தால் பெருமாளையும் தாயாரையும் தரிசனம் செய்துவிட்டு அங்கேயே அமர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் செய்பவராக இருக்கும் பட்சத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அவருக்கென்று ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு தரையில் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு கல் உப்பு, விரலி மஞ்சள், கண்ணாடி கிண்ணம் அல்லது பீங்கான் கிண்ணம் வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ஏதாவது ஒரு பொருளை பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இடது கையில் ஒரு விரலி மஞ்சள் வைத்துக்கொண்டு பெருமாளின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி உச்சரித்து முடித்த பிறகு கண்ணாடி கிண்ணம் நிறைய கல்லுப்பை பரப்பி அதற்கு மேல் இந்த விரலி மஞ்சளை வைத்து விட வேண்டும். இந்த கண்ணாடி கிண்ணத்தை பூஜை அறையிலும் வைக்கலாம், சமையல் அறையிலும் வைக்கலாம். ஆலயத்தில் வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கையில் விரலி மஞ்சள் மட்டும் வைத்துக்கொண்டு அந்த மந்திரத்தை கூறிவிட்டு வீட்டிற்கு வந்து கல் உப்பின் மேல் வைத்து விட வேண்டும். ஒரு மாதம் இது அப்படியே இருக்கட்டும். ஒரு மாதம் கழித்து இந்த விரலி மஞ்சளை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். கல் உப்பை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த விரலி மஞ்சளை வைத்துக்கொண்டு நாம் கூற வேண்டிய மந்திரம்

ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்

- Advertisement -

இந்த மந்திரத்தை கூறி விரலி மஞ்சளை வைக்கும் பொழுது குலதெய்வத்திடமும், பெருமாளிடமும், மகாலட்சுமி தாயாரிடமும் பணரீதியான அனைத்து நன்மைகளும் உண்டாக வேண்டும். பணவரவு ஏற்பட வேண்டும். ஐஸ்வரியம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு

இந்த எளிமையான பரிகார வழிபாட்டை பெருமாளின் மீது முழு நம்பிக்கை வைத்து புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அன்று செய்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்