சுவையான பூண்டு மிளகாய் பொடி சட்னி கிராமத்து ஸ்டைலில் இந்த மாதிரி செஞ்சு பாருங்க எத்தனை இட்லி கொடுத்தாலும் உங்களுக்கு பத்தவே பத்தாது சாப்பிட்டுகிட்டே இருப்பீங்க. அடுப்பு எதுவும் இல்லாமல், மிக்ஸியில் போட்டு அரைக்காமல் அரை நொடியில் எளிதாக செய்யக் கூடிய இந்த பூண்டு மிளகாய் பொடி சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். நீங்களும் இதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை நோக்கி பயணியுங்கள்.
பூண்டு மிளகாய் பொடி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு மிளகாய் பொடி சட்னி செய்முறை விளக்கம்:
பூண்டு மிளகாய் பொடி சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 15 பல் நல்ல நாட்டு பூண்டு பற்களை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிறிய அளவிலான உரல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு இடிக்க பயன்படுத்தும் உரல் இருந்தால் போதும்.
தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பூண்டை நன்கு மைய மை போல இடித்துக் கொள்ள வேண்டும். இடித்த பூண்டு பற்களுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்து மசிய இடித்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு தனி மிளகாய்த் தூளை சேர்க்க வேண்டும். மிளகாய் தூள் சேர்த்ததும் நன்கு எல்லாவற்றையும் ஒன்று போல கலந்து வர இடித்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ரெண்டு சிட்டிகை அளவுக்கு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடுங்கள்.
இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். சிலருக்கு தேங்காய் எண்ணெய் வாசம் பிடிக்காது, அதனால் அவர்கள் நல்லெண்ணெய் சேர்க்கலாம். தேங்காய் எண்ணெய் விரும்புபவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள், சுவையாக இருக்கும். நல்லெண்ணெய் சேர்த்ததும் கடைசியாக ஒரு சிறு துண்டு மிளகளவு வெல்லத்தை போட்டு இடித்து ஒரு கரண்டியை வைத்து நன்கு கலந்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியது
அவ்வளவுதான் இப்பொழுது சுவையான மற்றும் அருமையான கிராமத்து ஸ்டைல் மிளகாய் பொடி பூண்டு சட்னி தயார்! இந்த சட்னியை செய்வதற்கு மிக்ஸி எதுவுமே தேவையில்லை, அடுப்பை பற்ற வைத்து வதக்க வேண்டிய அவசியமும் இல்லை. ரொம்பவே சுவையாக இருக்கக் கூடிய இந்த பூண்டு மிளகாய் பொடி சட்னி இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்க அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, இனி அடிக்கடி இந்த சட்னி ரெசிபியை செய்து அசத்துவீங்க.