- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணக்கஷ்டம் நீங்க நவராத்திரி அம்மன் வழிபாடு

பணக்கஷ்டம் நீங்க நவராத்திரி அம்மன் வழிபாடு

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம் என்றால் அது பண கஷ்டம் தான். எல்லோருக்குமே செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதற்காகத்தான் கடினமாக உழைக்கவும் செய்கின்றோம். ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. வந்த பணம் கையில் நிலையாக தங்கவில்லை.

வீண் விரைய செலவுகள், தேவையில்லாத விஷயங்களுக்கு கையில் இருக்கும் பணம் கரைந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும். வீட்டில் நிம்மதியும் பணமும் நிலையாக தங்க வேண்டும் என்றால், இந்த நவராத்திரியில் அம்பாளுக்கு எந்த பூவை மாலையாக கட்டிப் போட்டு வேண்டுதல் வைக்க வேண்டும். பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பணக்கஷ்டம் நீக்கும் மாதுளை பூ

மாதுளை பூ. மாதுளை பழ மரத்தில், மாதுளை பூக்கள் பூத்திருக்கும். இந்த பூ கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். மாதுளை மரம் வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு இந்த பூ எளிதாக கிடைக்கும். அப்படி இல்லை என்றால் பழக் கடைக்காரரிடம் சொல்லி வைத்து வாங்குங்கள். ஒரே ஒரு மாதுளை பூ கிடைத்தாலும் போதும். அந்தப் பூவை அம்மனுக்கு மாலையாக கட்டிப் போடலாம். ஒரே ஒரு பூவை எப்படி மாலையாக கட்டுவது. கேள்வி புரிகிறது.

வாசனை நிறைந்த மல்லிப்பூ, ஜாதிப்பூ, இது போன்ற பூக்களை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பூவை வாழைநாறால் தொடுக்கும் போது இந்த மாதுளை பூவையும், அந்த பூவோடு வைத்து கட்டி இதை அப்படியே உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாளுக்கு கொண்டு போய் மாலையாக போட வேண்டும். துர்க்கை அம்மனுக்கு இந்த மாலையை போட்டு, வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால், நிச்சயம் அந்த பிரார்த்தனை நிறைவேறும்.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு இந்த பூவை போட முடியாத பட்சத்தில், வேறு ஏதாவது அம்மனுக்கும் இந்த மாலையை சாத்தலாம் தவறு கிடையாது. உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் என்பதே வராது. உங்களுடைய வீட்டில் நீங்கள் கொலு வைத்திருந்தால் தாமரை பூ, தாழம் பூ, மல்லிப் பூ, ஜாதிப் பூ, பன்னீர் ரோஜாக்கள் இப்படிப்பட்ட வாசனை நிறைந்த பூக்களை வைத்து அந்த கலசத்திற்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

வீட்டில் செல்வ செழிப்பை உயர்த்தும். உங்களுடைய வீட்டில் கொலு வைக்கவில்லை என்ன செய்வது. உங்க வீட்டு பக்கத்தில் கோவிலில் வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள். அந்த இடத்திற்கு இது போன்ற பூக்களை உங்கள் கையால் வாங்கி கொடுக்கலாம். அதுவும் நன்மையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நவராத்திரி முடிவதற்குள் மேல் சொன்ன வழிபாட்டை செய்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

இதையும் படிக்கலாமே: நவராத்திரியில் செய்ய வேண்டிய கொலு பொம்மை தானம்

உங்களுக்கு நிச்சயம் பணக்கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது. அப்படியே பணக்கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய தெம்பை அந்த அம்பாள் உங்களுக்கு கொடுத்து விடுவாள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்