தீபம் ஏற்றாத வீட்டை இருண்ட வீடு என்று கூறுவது உண்டு. நம்முடைய முன்னோர்கள் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார்கள். அப்படி தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும் என்று கூறப்படுகிறது. நமக்கு இருக்கக் கூடிய கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்திற்கு பல வகையான சக்திகள் இருக்கிறது. எந்தெந்த முறையில் நாம் தீபம் ஏற்றுகிறோமோ அதற்கேற்றார் போல் நமக்கு பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் மன கஷ்டம் நீங்கவும், பதவி உயர்வு ஏற்படவும், சுப காரியங்கள் நடைபெறவும் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நினைத்த காரியம் நடக்க தீப வழிபாடு
தீபத்தில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்று முப்பெரும் தேவியரும் மகாவிஷ்ணு சிவன், பிரம்மா என்ற முப்பெரும் தேவர்களும் குடியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அனைத்து விதமான சுபகாரியங்களுக்கும் தீபம் ஏற்றும் வழக்கம் என்பது இருக்கிறது. அப்படி தீபம் ஏற்றும் பொழுது குறிப்பாக சுமங்கலி பெண்களின் கைகளால் தீபம் ஏற்றுவார்கள். இதற்கு அதீத பலன் இருக்கிறது என்று கூறலாம். அப்படி வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் எந்த முறையில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று தான் பார்க்க போகிறோம்.
வீட்டில் சுப காரிய பேச்சு நடைபெறுகிறது அந்த சுபகாரியம் எந்தவித தடையும் இல்லாமல் நல்லவிதமாக நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மஞ்சளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தண்ணீரை ஊற்றி கெட்டியாக குலைத்து அதை அகல் விளக்கு போல் செய்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது அந்த சுப காரியம் எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறும்.
பதவி உயர்வு கிடைக்க வேண்டும், வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்க வேண்டும், நினைத்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சந்தன கட்டையை இலைத்து சந்தனத்தை விளக்கு போல் தயார் செய்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பதவி உயர்வு என்பது உண்டாகும். சந்தன கட்டை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் ஒரு தாம்பாள தட்டில் ஏலக்காயை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டாலும் நினைத்த வேலை நினைத்தபடி கிடைக்கும்.
என்ன செய்தாலும் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, மன கஷ்டம் அதிகமாக இருக்கிறது, வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம், ஏதோ ஒரு வித பயம் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது, தீய சக்திகளால் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் குங்குமத்தை அகல் விளக்காக பிடித்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:அடகு நகையை மீட்கவும் தங்கம் அதிக அளவில் சேரவும் செய்ய வேண்டிய பரிகாரம்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த தீப வழிபாட்டை தொடர்ச்சியாக யார் ஒருவர் மேற்கொள்கிறார்களோ அவர்களுடைய வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்