- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினை தீர ஐப்பசி பிரதோஷ வழிபாடு

கடன் பிரச்சினை தீர ஐப்பசி பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய அற்புதமான நாளாக தான் பிரதோஷம் திகழ்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் பலரும் இன்றளவும் பிரதோஷ நாளில் தங்களால் விரதம் இருக்க முடிகிறதோ இல்லையோ பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்கிறார்கள். இப்படி சிவபெருமானை பிரதோஷ நாளில் வழிபாடு செய்யும்போது பலவிதமான கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷம் என்பது மிகவும் சிறப்புக்குரியது. இதில் கூடுதல் சிறப்பாக செவ்வாய்க்கிழமையில் வருவதால் அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டால் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐப்பசி பிரதோஷ வழிபாடு

திருப்பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தை எடுத்து அந்த அமிர்தத்தை தேவர்கள் பருகினார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி அமிர்தத்தை எடுக்கும்போது முதலில் ஆலகால விஷம் தோன்றியது என்றும் அதோடு சேர்த்து வாசுகி வலி தாங்க முடியாமல் தன்னிடம் இருக்கக்கூடிய விஷயத்தையும் வெளியில் கக்கியது என்றும் இது அனைத்தும் சேர்ந்து உலகத்தையே அளிக்க வந்ததாகவும் அந்த ஆலகால விஷயத்தில் இருந்து உலகத்தை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அதை எடுத்து அருந்தியதாக கூறப்படுகிறது. அவ்வாறு அருந்தும் பொழுது பார்வதி தேவி தன்னுடைய திருகரங்களால் சிவபெருமானின் கழுத்திலே அந்த விஷயத்தை நிறுத்திவிட்டார் என்றும் இந்த நிகழ்வு நடந்ததை தான் பிரதோஷ நாள் என்றும் இந்த நிகழ்வு நடந்த நேரத்தை தான் பிரதோஷ நேரம் என்றும் கூறுவார்கள்.

- Advertisement -

இந்த உலகத்தையே அழிக்க வல்ல ஆழகால விஷயத்தையே தன்னகத்தே எடுத்துக்கொண்டு இந்த உலகத்தை காப்பாற்றியவர் சிவபெருமான் என்பதால் அன்றைய நாளில் நாம் அனைவரும் சிவபெருமானை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் அவர் எடுத்துக்கொண்டு நமக்கு நன்மைகளை தருவார் என்று கூறப்படுகிறது. பொதுவாக அன்றைய தினத்தில் பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். உடல் நலம் சரியில்லாதவர்கள் விரதம் இருப்பதை தவிர்த்து விட்டு சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வார்கள்.

மாலை 4:30 மணியில் இருந்து 6 மணி என்பது பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபாடு செய்யும் பொழுது அனைத்து தேவர்களின் அருளையும் நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதோஷமானது செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அது நம்முடைய கடன் பிரச்சினைகளை தீர்க்க வல்லதாக திகழ்கிறது.

- Advertisement -

அதனால் செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது இந்த இரண்டு பொருட்களை வாங்கித் தந்து வழிபாடு செய்தால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும், கடன் பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. இதில் ஒன்று சிவபெருமானுக்கும், பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு இணையாக அனைத்து விதமான அபிஷேகங்களையும் ஏற்றுக்கொள்ளும் நந்தீஸ்வரருக்கும் வாங்கி தர வேண்டும். நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு அதே போல் சிவபெருமானுக்கு வில்வமாலை சாற்றி வழிபாடு செய்வதும் அதிக பலனைத் தரும். இவர்கள் இருவருக்கும் இந்த இரண்டையும் வாங்கி நாம் தந்து வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் நம்மை கஷ்டப்படுத்தக் கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அது நீங்குவதற்குரிய வழி பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:தன்வந்திரி ஜெயந்தி வழிபாடு

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களையும் பிரதோஷ நாளன்று சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் வங்கி தருவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்