- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகம் பளபளப்பாக மாற பேசியல்

முகம் பளபளப்பாக மாற பேசியல்

- Advertisement -

இப்போதெல்லாம் ஏதாவது விசேஷம் அல்லது பங்ஷன் போக வேண்டும் என்றால் முதலில் நம் ஞாபகம் வருவது முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான். அதற்காக பார்லர் சென்று அதிக செலவு செய்து முகத்தை அழகாக மாற்றிக் கொண்டாலும், அவை அனைத்தும் கெமிக்கல் கலந்த கிரீம்களை வைத்து செய்வதால் முகத்தில் கண்டிப்பாக அதன் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த முறையில் நீங்கள் பயன்படுத்தும் போது வீட்டில் உள்ள பொருட்களை நீங்கள் உபயோகப்படுத்துவது மட்டுமில்லாமல் உங்கள் முகத்திற்கும் எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது அது எப்படி என்று அழகு குறிப்பு குறித்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம். முதலில் எந்த ஒரு பேக் போடுவதாக இருந்தாலும் முதலில் முகத்தை நன்றாக துடைத்த பிறகு தான் போட வேண்டும்.

- Advertisement -

அப்போது தான் நீங்கள் உபயோகிக்கும் எந்த கீரீமும் நல்ல பலன் தரும். சரி இப்போது இந்த பேஷியல் எப்படி செய்வது என்று பார்ப்போமா?. அதற்கு முதலில் காய்ச்சாத பாலை எடுத்து உங்கள் முகத்தில் தேய்த்து முகத்தை நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு ஸ்க்ரப் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் பால், இரண்டையும் சேர்த்து குழைத்து உங்கள் முகத்தில் தேய்த்து ஸ்க்ரப் செய்து முகத்தை துடைத்து விடுங்கள். இதை தேய்த்த உடனே துடைத்து விடலாம். அதன் பிறகு பேஷியல் பேக் போடும் முன் கெட்டியான தயிர் ஒரு ஸ்பூன், பீட்ரூட் ஜூஸ், ஒரு ஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து கொஞ்சம் மசாஜ் செய்த பிறகு முகத்தை துடைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கடைசியாக இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸ், ஒரு டீஸ்பூன் பால், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக குழைத்த பிறகு இதை உங்கள் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் வரை இந்த பேக் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு உங்கள் முகத்தை துடைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பார்லர் சென்று பேஷியல் செய்தால் கூட இத்தனை பளப்பளப்பாக உங்கள் முகம் மாறி இருக்குமா? என்பது சந்தேகம் தான்.

இதையும் படிக்கலாமே:முகப்பருக்கள் நீங்கி சருமம் பளபளக்க

இந்த முறையில் நீங்கள் அடிக்கடி செய்தாலும் உங்கள் முகத்திற்கு எந்த வித பக்கவிளைவும் ஏற்படாது. ஆனால் இந்த முறைகளை மட்டும் ஒவ்வொன்றாக சரியாக செய்து கொள்ளுங்கள் போதும். உங்கள் முக அழகை பார்த்து நீங்களே அதிசயித்து போவீர்கள். இந்த குறிப்பை எந்த வகை சருமத்தினருக்கு பயன்படுத்தலாம்.

சற்று முன்