- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொருளாதாரத்தில் உயர கீழாநெல்லி வேர் பரிகாரம்

பொருளாதாரத்தில் உயர கீழாநெல்லி வேர் பரிகாரம்

- Advertisement -

பொருளாதாரத்தில் நீங்கள் என்றைக்குமே கீழ்நோக்கி போகாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த வேர் எப்போதும் உங்கள் பணப்பெட்டியில் இருக்க வேண்டும். நிறைய பேர் பொருளாதாரத்தில் ரொம்பவும் நொடிந்து காணப்படுவார்கள். அதாவது எவ்வளவுதான் உழைத்தாலும் பணம் என்பது சேராது, பணம் வந்தாலும், அது சேமிப்பில் தாங்காது, வீண் விரைய செலவுகள் அதிகமாக ஆகும்.

ஒரு மனிதனுடைய பொருளாதாரம் என்பது எப்போதுமே சீராக இருக்காது. கட்டாயம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும், நம்முடைய கையில் கொஞ்சம் பணம் எப்போதுமே தங்கி இருக்க வேண்டும். அத்தியாவசிய செலவுகள் வரும் போதெல்லாம் கையில் எப்போதும் பணம் இல்லை, எந்த செலவுக்கு பணம் கேட்டாலும் வீட்டில் பிரச்சனை என்றால், கட்டாயம் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

- Advertisement -

உங்களுடைய குடும்பத்தில் நிம்மதியோடு சேர்த்து நிறைய பணப்புழக்கமும் இருக்க வேண்டுமா. பொருளாதாரத்தில் நீங்கள் எதிர்பாராமல் கூட அதல பாதாளத்தில் விழக்கூடாது என்று நினைத்தால் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வறுமை நிலை கூடிய விரைவில் நீங்கி, சீக்கிரம் செல்வ நிலையை அடையலாம்.

இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு முதலில் முக்கியமாக தேவைப்படக்கூடிய ஒரு வேர் கீழாநெல்லி வேர். கீழாநெல்லி வேர் உங்களை பொருளாதாரத்தில் கீழே தள்ளி விடாமல் பாதுகாக்க கூடிய வேர். கீழாநெல்லி செடியிலிருந்து கொஞ்சமாக வேரை பிடுங்கி எடுத்துக் கொள்ளுங்கள். வேர் எடுப்பதற்கு முன்பு இது நல்லதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும், என்னுடைய பரிகாரத்திற்காக பறிப்பதற்கு மன்னிப்பும் கோரி வேரை பறித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த வேரை கொஞ்சம் தண்ணீரில் அலசி எடுத்து விடுங்கள். மண் போகட்டும் இந்த வேரை கொண்டு வந்து கொஞ்சமாக பணம் வைக்கும் பெட்டியில் போட்டு வைத்தால், உங்களுடைய பொருளாதார உயரும்.

இந்த வேர் இருக்கக்கூடிய இடத்தில் நிறைய பணம் சேரும். இன்னும் கொஞ்சம் வேர் தனியாக எடுத்துக்கோங்க. அதை உங்கள் வீட்டில் இருக்கும் விபூதி டப்பாவில் போட்டு வையுங்கள். அந்த கீழாநெல்லி வேர் போட்டு வைத்திருக்கும் விபூதியை தினமும் நெற்றியில் எடுத்து, சிவபெருமான் இந்நினைத்து பூசிக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகேய துவாதச நாம ஸ்தோத்திரம்

என்னுடைய பொருளாதாரம் எந்த நாளிலும் வீழ்ச்சி அடைய கூடாது என்று வேண்டுதல் வைத்துவிட்டு ‘ஓம் ஸ்ரீ ஓம்’ என்ற மந்திரத்தை சொல்லி விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். சிவபெருமான் உங்களை பொருளாதாரத்தில் மேலே உயர்ந்த நிலைக்கு கூட்டி செல்வார். இந்த இரண்டு எளிமையான பரிகாரங்களும் உங்களை வறுமையிலிருந்து மீட்டு எடுக்கக்கூடிய பரிகாரங்கள் சக்தி வாய்ந்த பரிகாரங்கள் நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்