புதிதாக ஒரு விஷயத்தை செய்யும் பொழுது பொதுவாகவே நல்ல நாள், நேரம், கிழமை, நட்சத்திரம் எல்லாம் பார்ப்பது வழக்கம். நல்ல காரியத்திற்காக ஒரு விஷயத்தை துவங்கும் பொழுது நாள், நட்சத்திரம் பார்ப்பது ரொம்பவும் முக்கியம். அந்த வகையில் புதிதாக நீங்கள் பணம் சேர்க்க ஆரம்பிக்க போகிறீர்கள், வங்கி கணக்கு துவங்கப் போகிறீர்கள் என்றால் எந்த நேரத்தில்? எந்த நாளில் துவங்கலாம்? என்னும் ரகசியத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
புதிதாக வீட்டில் இருப்பவர்களின் பெயரில் அல்லது குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கை துவங்க நினைப்பவர்கள் சரியான நேரம், நாள், நட்சத்திரம் பார்த்து துவங்கினால் அதில் போடும் பணமானது கரையாமல் சேர்ந்து கொண்டே செல்லும் என்பது ஐதீகம். பணம் என்பது அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்யக் கூடிய ஒரு விஷயமாக இன்று மாறிவிட்டது. இந்த பணத்தை சேகரிப்பதில் சற்று கவனம் செலுத்தினால், வெற்றி உங்கள் கைப்பிடியில் இருந்து எங்கும் செல்லாது.
புதிதாக வங்கி கணக்கை துவங்க இருக்கிறீர்கள் என்றால் முதலில் காலண்டரை தேடுங்கள். வியாழன் கிழமை குரு பகவானுக்கு உகந்த நல்ல பணவரத்து தரக்கூடிய கிழமை ஆகும். இந்த வியாழன் கிழமையுடன், பூரட்டாதி நட்சத்திரம் சேர்ந்து வர வேண்டும். பூரட்டாதி நட்சத்திரம் வரக் கூடிய வியாழன் கிழமையில் நீங்கள் புதிய வங்கி கணக்கு துவங்க, பணமானது நிற்காமல் மென்மேலும் சேர்ந்து கொண்டே செல்லும் என்பதை ஜோதிட ரகசியம் ஆகும்.
வங்கி கணக்கு துவங்குவது மட்டுமல்லாமல், நீங்கள் வீட்டிலேயே ஒரு புதிய உண்டியலில் பணம் சேர்க்க இருக்கிறீர்கள் என்றாலும், இது போல பூரட்டாதியும், வியாழன் கிழமையும் சேர்ந்து வரக் கூடிய குரு பகவானுக்கு உகந்த சக்தி வாய்ந்த இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை போட்டு சேகரிக்க துவங்கினால், வெற்றி நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும்.
பணத்தை சுலபமாக செலவு செய்து விடுகிறோம், ஆனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு நபரால் ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் கூட சேர்க்க முடிவதில்லை. ஐந்தாயிரம் ரூபாய் சேர்ப்பதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது என்று சொல்லுபவர்கள் தான் நம்மில் ஏராளம். குறிப்பிட்ட பணத் தொகையை சேர்ப்பதற்குள், அதற்கென ஒரு செலவு வந்து விடுகிறது. மீண்டும் அந்தத் தொகையை சேகரித்தால், அதற்கு என்று தனியாக ஒரு செலவு வந்து சேரும். இப்படி மாற்றி மாற்றி வரும் செலவை சமாளிக்கும் நம்மால், சேமிப்பை பற்றி நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.
இதையும் படிக்கலாமே:
கடனைக் குறைக்கும் எளிமையான ஆன்மீக பரிகாரங்கள்.
நம்பிக்கையுடன் வியாழன் கிழமை, பூரட்டாதி நட்சத்திரத்தில் பணத்தை முதன்முறையாக புதிய மண் உண்டியலில் அல்லது புதிய வங்கி கணக்கு துவங்கி அதில் போட்டு பாருங்கள், நிச்சயம் பணமானது உங்களால் எல்லோரைப் போலவும் சேர்த்து மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும். சில விஷயங்களை நாள், நட்சத்திரம் பார்க்காமல் செய்வதால் அதன் விளைவுகள் எதிர்மறையாக அமைந்து விடும், எனவே நேர்மறையான சிந்தனையுடன் இதே நாள், நட்சத்திரத்துடன் நீங்கள் பணத்தை சேகரித்து பாருங்கள். உங்களால் தொடர்ந்து பணத்தை சேமித்து வெற்றி காண முடியும்.