- Advertisement -

வேல் காயத்ரி மந்திரம்

- Advertisement -

வேல் வேல் முருகா, வெற்றி வேல் முருகா! முருகன் பாதத்தை எவரொருவர் நம்பிக்கையோடு பற்றிக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் வெற்றிதான். சில பல சூழ்நிலைகளில் தோல்வி வந்தாலும் அந்த தோல்வியிலிருந்து காப்பாற்ற, அந்த முருகப்பெருமானே ஆசீர்வாதங்களை வழங்கி விடுவார், ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த முருகன் வந்து உங்களை காப்பாற்றியும் விடுவார்.

இது முருக பக்தர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் முருகன் கையில் இருக்கும் வேல் நம்மை காத்தருள வேண்டும் என்றால், நாம் தினமும் சொல்ல வேண்டிய வேல் மந்திரத்தைப் பற்றித்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் வேல் வழிபாடு, வேல்மாறல் படிப்பது இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்.

- Advertisement -

ஐந்து அல்லது ஆறு வருடத்திற்கு முன்பு யாரிடமாவது போய் வேல்மாறல் என்றால் என்ன என்று கேட்டால், பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் இந்த யூடுபின் மூலமாக பல கெடுதலான விஷயங்கள் மக்களுக்கு தெரிய வந்தாலும், இப்படி மக்கள் அறியாத சில ஆன்மீக ரீதியான விஷயங்களைத் தெரிந்து கொள்ள இப்படிப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுவதை நினைத்து பெருமிதம் கொள்வோம்.

சரி, வேல் வழிபாடு செய்கின்றோம். ஆனால் தினமும் வேல்மாறல் படிக்க முடியவில்லை. ஆனால் கந்தனின் கருணை நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், எந்த மந்திரத்தை சொல்லலாம். வேல் காயத்ரி மந்திரம் என்ற ஒன்று இருக்கிறது. அதை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து முருகப்பெருமானின் முன்பு இந்த மந்திரத்தை ஒரு முறை சொல்லிவிட்டு, உங்கள் நாளை துவங்கினால் உங்கள் நாள் வெற்றிகரமான நாளாக மாறும்.

- Advertisement -

வாழ்க்கையில் போராட்டம் போராட்டம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் சாந்தம் வந்துவிடும். உங்கள் கஷ்டங்களை எல்லாம் இந்த வேல் வதம் செய்து விடும். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று அந்த முருகப்பெருமான் முன்பு அமர்ந்து இந்த வேல் காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம். தினமும் செல்ல வேண்டிய அந்த வேல் காயத்ரி மந்திரம் இதோ உங்களுக்காக

வேல் காயத்ரி மந்திரம்

ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே
கோடி சூர்ய பிர்காசாய தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

- Advertisement -

தினமும் வேல்மாறல் பாராயணம் செய்ய முடியவில்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலுக்கு முன்பு இந்த காயத்ரி மந்திரத்தை சொன்னாலே போதும் வேல்மாறல் பாராயணம் செய்த புண்ணியத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: நாளை சிவன் வழிபாடு செய்ய வேண்டிய 3 ராசிகள்

கோடி சூரியனை ஒன்றாக சேர்த்தால், நெருப்பின் பிழம்பு எப்படி இருக்கும் அத்தனை சக்தி வாய்ந்த வேலே, கந்தனின் கையில் இருக்கும் வேல், அனைத்து பக்தர்களையும் காத்திடுவாய், என்பதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த எளிமையான மந்திரத்தை மனப்பாடம் செய்து கொண்டு பிரச்சனை வரும்போது, நின்ற இடத்திலிருந்து முருகனை வேண்டி சொன்னாலும் பிரச்சினையில் இருந்து உங்களை காப்பாற்ற அந்த முருகப்பெருமான் ஏதாவது ஒரு ரூபத்தில் உதவி செய்வார், என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்