நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும், சங்கடங்களையும், துன்பங்களையும், துயரங்களையும் போக்கக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக திகழக்கூடியவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்குரிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் கஷ்டம் என்பது 99.9% வரை பணத்தால் மட்டுமே உண்டாகின்றது. அப்படிப்பட்ட பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சங்கடஹர சதுர்த்தி நாளன்று நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணத் தேவையை பூர்த்தி செய்யும் வழிபாடு
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்கு பணம் என்பது கண்டிப்பான முறையில் தேவை. நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு வந்து விட்டால் நம் கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. வருகின்ற வருமானத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் பலராலும் அவர்களுடைய வருமானத்திற்குள் வாழ்க்கையை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றவும் அவர்களுடைய பணத்தேவையை பூர்த்தி செய்வதற்குரிய வழியையும் தான் இந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாடு தரும்.
பொதுவாக பலரும் சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க முடியாதவர்கள் மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று சங்கடஹர சதுர்த்தி நாளன்று செய்யக்கூடிய அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வழிப்பாட்டு முறை என்பது இருக்கும். எந்த வழிபாட்டை செய்பவர்களாக இருந்தாலும் இந்த ஒரு முறையை பின்பற்றும் பொழுது அவர்களுடைய பணத்தை பூர்த்தி அடையும்.
மாலை 6:00 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்தையோ அல்லது விநாயகரின் சிலையையோ சுத்தம் செய்து கொள்ளுங்கள். சிலை இருக்கும் பட்சத்தில் தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்வது நல்ல பலனைத் தரும். பிறகு சுத்தமான சந்தனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பன்னீரை ஊற்றி கெட்டியாக பிணைந்து கொள்ளுங்கள். இந்த உருண்டையை அப்படியே விநாயகரின் தொந்தியில் வைக்க வேண்டும். அதாவது வயிற்றில் வைக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஒட்டி விட வேண்டும்.
இப்படி செய்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி இரண்டு தீபம் ஏற்றி வைத்து தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது “எனக்கு இருக்கக்கூடிய தேவைகள் பூத்திடுவதற்குரிய பணவரவு உண்டாக வேண்டும்” என்று முழுமனதோடு விநாயகர் பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு எப்போதும் போல் கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
மறுநாள் காலையில் விநாயகரின் தொந்தியில் வைத்த சந்தனத்தையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் அப்படியே எடுத்து விடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை உங்களுடைய பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எந்தவித செலவிற்கும் உபயோகப்படுத்தக் கூடாது. சந்தனத்தை தினமும் உங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ருண ஹர சதுர்த்தி வழிபாடு
இந்த முறையில் விநாயகப் பெருமானுக்கு ஒரு ரூபாயை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.