சின்னதாக முதலீடு போட்டு பெரிய அளவில் சம்பாதித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஒரு பத்து வருடத்திற்கு முன்பு வியாபாரம் செய்வது, முதல் போட்டு சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமாக யாருக்கும் இருந்ததில்லை. அதே வியாபாரத்தை இன்றைய சூழ்நிலையில் செய்து லாபம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.
காரணம் போட்டி பொறாமை. ஒரு டீக்கடை வைத்தால் அதற்கு பக்கத்தில் 10 டீக்கடை. ஒரு பேக்கரி இருந்தால் அதுக்கு பக்கத்தில் 10 பேக்கரி. ஒரு பூ கடை விழுந்தால் அதற்கு பக்கத்தில் 10 பூக்கடை. யாரையும் குறை சொல்லவில்லை. இன்று கால சூழ்நிலை அப்படி மாறிவிட்டது.
சில பேர் சொல்லுவார்கள். அப்பா செய்த தொழில்தான். அப்பா ஓஹோ என லாபம் சம்பாதித்தார். இன்று அதே தொழிலை மகன் செய்வார். ஆனால் அதிலிருந்து லாபம் எடுக்க முடியாது. சில பேர் சொல்லுவார்கள். மூன்று மாதத்திற்கு முன்னால் வியாபாரம் கடையில் நன்றாகத் தான் நடந்தது. ஆனால் இன்று வியாபாரம் டல் அடிக்குது. லாபம் எடுக்க முடியவில்லை.
சின்ன சின்ன காய்கறி கடை பழக்கடை, பேன்சி ஸ்டோர், மளிகை கடை, டெய்லர் கடை, இப்படி நீங்கள் எந்த வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, கொஞ்சம் பெரிய அளவில் அலுவலகம் வைத்து ஏதோ பிசினஸ் செய்றீங்க. அப்படி என்றாலும் சரி, இந்த பரிகாரம் உங்களுக்காக தான்.
அடுத்தவர்கள் கண் திருஷ்டி விழுந்தோ அல்லது ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றலின் மூலமாக உங்களுடைய வியாபாரம் படுத்துவிட்டது. அதிலிருந்து உங்கள் வியாபாரத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது. பொதுவாக இந்த செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமை எல்லாம் திருஷ்டி கழிப்பதற்கு உகந்த நாள் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் இன்று செவ்வாய் கிழமை. இன்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் சமயம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
வியாபாரத்தை முடித்துக் கொள்ளுங்கள். பரிகாரத்தை செய்துவிட்டு வியாபாரம் செய்யக்கூடாது. வேலை செய்யக்கூடிய அலுவலகம் என்றால், பரிகாரத்தை செய்து விட்டு வேலையெல்லாம் செய்யக்கூடாது. எல்லா விஷயத்தையும் முடித்து விடுங்கள். கடை அடைக்க போறிங்க ஷட்டர் மூட போறீங்க. அதற்கு முன்பு கையில் ஒரு 5 எலுமிச்சம் பழம் எடுத்துக் கொள்ளுங்கள். கடையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் வெளியேற வேண்டும் கடையில் நல்ல வியாபாரம் நடக்க வேண்டும் என்று குலதெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அந்த பழங்களை இரண்டாக வெட்டினால் பத்து துண்டுகள் கிடைக்கும். 10 தூண்டிலும் நல்ல சிவப்பு நிற குங்குமத்தை தடவி விடுங்கள். உங்களுடைய கடையில் முதலில் நான்கு திசையில் ஒவ்வொரு பாதி எலுமிச்சம் பழத்தை வைத்து விடுங்கள். பிறகு மற்ற மூளை முடுக்குகளில் எல்லாம் எங்கெங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மீதி இருக்கும் எலுமிச்சம்பழத் துண்டுகளை வைத்து கடையை அடைத்துவிட்டு கடைக்கு வெளியே ஒரு சூடம் பொரித்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு கிளம்பி விடுங்கள்.
மறுநாள் காலை வந்து கடையை திறந்து உள்ளே இருக்கக்கூடிய எலுமிச்சம் பழங்களை எல்லாம் ஒரு கேரிகவரில் எடுத்து போட்டு முடிச்சு போட்டு, கொஞ்சம் கடையை விட்டு தூரமாக குப்பை கூலங்கள் இருக்கும் இடத்திற்கு சென்று இந்த பழத்தை வீசிவிட்டு வந்து, கடையை முழுவதும் கூட்டி சுத்தம் செய்யுங்கள். மூளை முடுக்குகளில் எல்லாம் மஞ்சள் தண்ணீர் கல் உப்பு கலந்து தெளித்து விடுங்கள்.
கோமியம் கிடைத்தால் ரொம்ப சிறப்பு. சாமி படம் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு வியாபாரத்தை துவங்குங்கள். உங்கள் கடைக்குள் இருக்கும் நெகடிவ் எனர்ஜியை எல்லாம் வெளியேற்றக்கூடிய பரிகாரம் தான் இது. இரவு முழுவதும் இருந்த எலுமிச்சம்பழம் கடைக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எல்லாம் தன்னகத்தை ஈர்த்திருக்கும்.
இதையும் படிக்கலாமே: ராஜா அலங்கார முருகன் வழிபாடு
வியாபாரம் தலை தூக்குவதற்கு இந்த எளிய பரிகாரமே போதுமானது. செவ்வாய்க்கிழமையான இரவு, இன்று குல தெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் லாபம் பெருகும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.