- Advertisement -
Homeஜோதிடம்வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram Tamilவாஸ்து நாளில் இதை செய்யுங்கள்

வாஸ்து நாளில் இதை செய்யுங்கள்

- Advertisement -

ஒரு வீடு கட்டும் பொழுதே சரியான அமைப்புடன் கட்டி முடித்து விட்டால் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் நம் வீட்டை கட்ட துவங்கும் பொழுதே நமக்கென்று ஒரு தனிப்பட்ட ஆசைகள் அதிகரிக்க ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆசைகளின் பேரில், சில மாற்றங்களை செய்ய போய் அது வாஸ்து தோஷமாக மாறிவிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாஸ்து தோஷங்களில் இருந்து விடுபட்டு, பண வரத்து வீட்டில் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிய விஷயம் என்ன? என்னும் தகவல்களைத் தான் வாஸ்து சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.

வாஸ்து ரீதியாக ஒரு வீட்டில் நல்ல காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் இருந்தால் தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது. காற்று புகாதபடி அடைந்தது போல இருக்கும் வீடுகளில் பண வரத்து குறையும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கும். வாஸ்து நாள், வாஸ்து செய்வதற்கு நல்ல நாள் என்பது அறிந்தது தான். ஒரு வீட்டிற்கு அல்லது இடத்திற்கு வாஸ்து பார்க்க போகிறோம் என்றால் வாஸ்து நாளில் நாம் செல்லலாம்.

- Advertisement -

வாஸ்து செய்ய நல்ல நாள் என்று கேலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நாளில் வாஸ்து செய்வதற்கு மட்டுமல்லாமல் திருஷ்டி பரிகாரத்தையும் செய்யலாம். உங்கள் வீட்டில் திருஷ்டிகள் இருக்கிறது, உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பொறாமையோடு பார்க்கிறார்கள் என்றால் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

வாஸ்து செய்யக் கூடிய அந்த நல்ல வாஸ்து நாளில் கிழக்கு பார்த்தபடி வீட்டிற்கு வெளியே வந்து ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை வைத்துக் கொண்டு அதில் கொஞ்சம் வெண்கடுகு மூன்று வர மிளகாய்களை சேர்த்து வலது புறம் மூன்று முறையும், இடது புறம் மூன்று முறையும் திருஷ்டி சுற்றுவது போல சுற்றி நெருப்பில் போட்டு திருஷ்டியை கழிக்க வேண்டும். திருஷ்டி சுற்றிய பின்பு கையில் இருக்கும் பொருட்களை கொண்டு போய் நெருப்பில் போட வேண்டும்.

- Advertisement -

முன்கூட்டியே நீங்கள் சாம்பிராணி போடும் தூபக்காலில் நெருப்பினை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொண்டு போய் இந்த பொருளை எல்லாம் போட்டு வெடிக்க செய்ய வேண்டும். வெண் கடுகு வெடித்து படபடவென துர்நாற்றத்துடன் வெடிக்க ஆரம்பிக்கும். வரமிளகாயில் இருக்கும் நெடியும் பரவ ஆரம்பிக்கும். இந்த எளிய திருஷ்டி பரிகாரம் வாஸ்து நாளில் செய்யும் பொழுது வாஸ்து பரிகாரமாகவும் அமைந்து விடுகிறது.

இதையும் படிக்கலாமே:
5-12-2024 அபிஜித் நட்சத்திர நேரம்

மாதத்திற்கு ஒருமுறை வாஸ்து நாளில் அந்தி சாய்ந்த பிறகு வீட்டிற்கு இது போல திருஷ்டி சுற்றி போடுங்கள். வீட்டில் இருக்கக் கூடிய கெட்ட சக்திகள், செய்வினை, ஏவல்கள், திருஷ்டிகள் அனைத்தும் வெளியேறி நிதி சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்து, பண வரத்து அதிகரிக்க ஆரம்பிக்கும். தொழிலில் நஷ்டம் உள்ளவர்கள், வாஸ்து ரீதியாக பிரச்சனைகள் இருப்பவர்கள், குடும்பத்தில் தீராத சிக்கல்கள் தவிப்பவர்கள் வாஸ்து ரீதியாக இந்த பரிகாரத்தை மேற்கொண்டு வந்தால் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை காணலாம். மேலும் வாஸ்து பரிகாரத்திற்கு வீட்டை சுற்றிலும் பச்சை பசேல் என கொடி போன்ற தாவரங்களை வளர்க்க வேண்டும். கொடி தாவரங்களை வளர்க்கும் பொழுது வாஸ்து தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை உண்டு.

சற்று முன்