- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval28-11-2024 வியாழக்கிழமையில் வந்திருக்கும் பிரதோஷம்.

28-11-2024 வியாழக்கிழமையில் வந்திருக்கும் பிரதோஷம்.

- Advertisement -

நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக் கூடிய கார்த்திகை மாத பிரதோஷம். கார்த்திகை மாதம் என்றாலே ஈசனுக்கு உகந்த மாதம் தான். அதிலும் பிரதோஷம், வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. வியாழக்கிழமை குபேரருக்கு உகந்த நாள். குபேரருக்கு கோடான கோடி செல்வ வளங்களை கொட்டிக் கொடுத்ததே ஐஸ்வர்யேஸ்வரர் தான்.

நாளைய தினம் ஈசனை மனம் உருக எவர் ஒருவர் வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு குபேர சம்பத்து நிச்சயம் கிடைக்கும். நாளைய தினம் எளிமையான முறையில் பிரதோஷ வழிபாட்டினை எப்படி மேற்கொள்ளலாம். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நாளைய தினம் வழக்கம் போல உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியும் என்றால், செய்யுங்கள். ஆனால் எல்லா இடங்களிலும் இன்றைய சூழ்நிலையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக கோவில் வழிபாடு செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே நாளை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் பூஜை அறையில் ஈசனை நினைத்து பின் சொல்லக் கூடிய வழிபாட்டை மேற்கொண்டால், உங்கள் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பணக்கஷ்டமும் மன கஷ்டமும் விலகிவிடும். நாளை வியாழக்கிழமை மாலை 5:00 மணியில் இருந்து 8:00 மணிக்குள் குபேர நேரம். ஆக இந்த நேரமும் பிரதோஷ நேரத்தோடு சேர்கிறது.

வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு

வழக்கம்போல பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். சிவலிங்கம் இருந்தால் அபிஷேகம் செய்யுங்கள். அண்ணாமலையார் படமோ சிவன் திருவுருவப்படமோ இருந்தால் அதற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து, இருக்கின்ற பூக்களை போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வில்வ இலை கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டிலேயே ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். விபூதி எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் இருக்கும். அதை தட்டில் பரப்பி அதன் மேலே ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதி விடுங்கள். அந்த விபூதிக்கு மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, முடிந்தால் நெய், இல்லை என்றால் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ‘ஓம் நமசிவாய’ சொல்லி தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

‘ஓம் ஐஸ்வர்யேஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். 108 நாணயங்கள் இருந்தால், அந்த விளக்கத்திற்கு போட்டு அர்ச்சனை செய்யலாம். முடியாது என்பவர்கள் வெறும் பூக்களை போட்டு அர்ச்சனை செய்யுங்கள். எதுவுமே முடியாது என்பவர்கள் இரண்டு கை கூப்பி, மந்திரத்தை சொல்லி ஈசனை வணங்கி, எனக்கும் குபேர சம்பத்து கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை வைக்க வேண்டும்.

- Advertisement -

ஈசனை மனம் உருக வேண்டிக் கொள்ளுங்கள். கடன் ஏதாவது இருந்தால் அதெல்லாம் திருப்பி சீக்கிரம் தர வழியை காட்டு இறைவா என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக உங்களால் முடிந்த நெய்வேதியம் வைத்து கற்பூர ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் கரைய செந்தூர பரிகாரம்

விளக்கு, எண்ணெய் தீரும் வரை எறியட்டும். பிறகு விளக்குக்கு கீழே இருக்கும் நாணயங்களை சேகரித்து கோவில் புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து கொள்ளலாம். அந்த விபூதியை ஒரு டப்பாவில் கொட்டி தினமும் ஐஸ்வர்யேஸ்வரர் நினைவு, சிவனின் நாமத்தைச் சொல்லி இந்த விபூதியை நெற்றியில் இட்டு வர உங்களுக்கு ஐஸ்வரியம் கிடைக்கும். குபேர சம்பத்தும் கிடைக்கும். அதில் ஒரு துளி மாற்றமும் கிடையாது. இந்த எளிமையான பரிகாரத்தை நாளை செய்பவர்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் இருக்கும் பணக்கஷ்டத்திற்கு கூட சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறந்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்