- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் கரைய செந்தூர பரிகாரம்

கடன் கரைய செந்தூர பரிகாரம்

- Advertisement -

ஒருவர் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அவர் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். கடன் இல்லாமல் இருப்பவரால் மட்டுமே தான் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியும். கடன் இருக்கும் பட்சத்தில் அந்த கடனை அடைக்க வேண்டும் என்பதற்காகவே பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருப்பார்கள். ஒரு சிலர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள், இன்னும் சிலரோ வேறு யாரிடமிருந்து கடனை வாங்கி இந்த கடனை அடைப்பது என்று யோசிப்பார்கள், இன்னும் சிலரோ தங்களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய இடம், வீடு, நகை போன்றவற்றை விற்றாவது கடனை அடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வைக்க கூடிய ஒன்றாக தான் கடன் திகழ்கிறது. அப்படிப்பட்ட கடனை அடைப்பதற்கு செந்தூரத்தை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் கரைய செந்தூர பரிகாரம்

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு அவர்களுடைய ஜாதக அமைப்பும், முன் ஜென்ம கர்ம வினைகளும் தான் காரணமாக திகழ்கிறது. இந்த முன் ஜென்ம கர்ம வினைகளை தீர்ப்பதற்கும் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களை நீக்குவதற்கும் உதவக்கூடிய தெய்வங்களும் ஒருவராக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், கஷ்டங்கள், எதிரிகள் தொல்லை போன்ற அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு உகந்த ஒரு பொருளாக திகழ்வதுதான் செந்தூரம். செந்தூரத்தை வைத்து எந்த முறையில் வழிபாடு செய்து பரிகாரம் செய்தால் கடன் பிரச்சினை தீரும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக ஆஞ்சநேயரின் வழிபாடு என்பது மிகவும் முக்கியம். ஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்லும் பொழுது ஒற்றைப்படை எண்ணிக்கையில் வெற்றிலை மாலையை கட்டி எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இந்த வெற்றிலை மாலையை கட்டும் பொழுது உங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு கட்ட வேண்டும். பிறகு தங்களால் இயலும் பட்சத்தில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றலாம். பிறகு தங்களால் இயன்ற அளவு செந்தூரத்தை அங்கு இருக்கக்கூடிய ஐயரிடம் கொடுத்து ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து கற்பூர தீபாரதனை காட்டும் பொழுது உங்களுடைய கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் என்று ஆஞ்சநேரிடம் வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த செந்தூரத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வர வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகே கடல், ஆறு, நதி போன்ற இவை மூன்றில் ஏதாவது ஒன்று இருக்கும் இடத்திற்கு இந்த செந்தூரத்தை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். முடிந்த அளவிற்கு கடலுக்கு செல்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குளம் குட்டை போன்றவற்றில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.

- Advertisement -

இந்த செந்தூரத்தை உங்களுடைய இரண்டு கைகளிலும் நன்றாக முழுவதுமாக தடவிக் கொள்ளுங்கள். இவ்வாறு தடவும் பொழுது உங்களுக்கு என்னென்ன கடன் பிரச்சினை இருக்கிறதோ அது அனைத்தையும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கைகளை அந்த ஓடுகின்ற தண்ணீரில் வைத்து அந்த செந்தூரத்தை கரைத்து விட வேண்டும். அவ்வாறு கரைக்கும் பொழுது உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் கரைந்து போக வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த முறையில் நாம் வழிபாடும் பரிகாரமும் செய்யும்பொழுது ஆஞ்சநேயரின் அருளால் செந்தூரம் கரைவது போல நம்முடைய கடன் பிரச்சனையும் கரையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வீடு நிலம் விற்க வழிபாடு
ஆஞ்சநேயருக்கு உகந்த செந்தூரத்தை வைத்து இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து அவரை முழுமனதோடு நம்பி இந்த ஒரு பரிகாரத்தையும் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக கரைந்து ஒன்றும் இல்லாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்