- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமங்கு கருந்திட்டுகள் நீங்க வழிமுறைகள்.

மங்கு கருந்திட்டுகள் நீங்க வழிமுறைகள்.

- Advertisement -

ஒருவருக்கு அவருடைய முகத்தில் மங்கோ கருந்திட்டுகளோ ஏற்பட்டு திட்டு திட்டாக ஆங்காங்கே கருப்பாக இருக்கும் பொழுது அவர்களுடைய தன்னம்பிக்கை உடைவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் பார்ப்பவர்கள் எல்லாரும் அதை ஒரு கேள்வி பொருளாகவே மாற்றி விடுவார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மை அறியாமலேயே நம் மனதில் வந்துவிடும். இதற்காக தேவையற்ற கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மங்கு அதிகரிக்க ஆரம்பிக்குமே தவிர்த்து அது குறைவதற்குரிய வழி என்பது ஏற்படாது. அதனால் இயற்கையிலேயே நம்முடைய முகத்தையும் உடலையும் முறையாக பராமரித்தோம் என்றால் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகளும் மங்கும் முற்றிலும் நீங்கும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அந்த வழிமுறைகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

மங்கு கருந்திட்டுகள் நீங்க வழிமுறைகள்

ஒருவருடைய முகம் எந்த அளவிற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அந்த அளவிற்கு கெமிக்கல் சேர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் எடுக்கக்கூடிய உணவானது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த அழகு நிரந்தரமான அழகாக இருக்கும். அதை தவிர்த்து கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி தடவுவதன் மூலம் உண்டாகக்கூடிய அழகானது ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும்தான் இருக்கும். பிறகு அதனால் அதிக அளவில் பக்க விளைவுகள் உண்டாகும் என்பதை எப்பொழுதுமே மறக்கக்கூடாது.

- Advertisement -

அந்த வகையில் கருந்திட்டுகள் நீங்கவும், மங்கு மறையவும் உள்ளாகாரமாகவும் சில உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிப்புறமாகவும் சில வழிமுறைகளை பின்பற்றினோம் என்றால் விரைவிலேயே இந்த பிரச்சனை தீரும். மங்கு பிரச்சனை இருப்பவர்கள் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக தங்கள் முகத்தில் படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய ஒளிகதிர்கள் முகத்தில் நேரடியாக படும்பொழுது அதிக அளவில் மங்கும் கருந்திட்டும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

அடுத்ததாக முகத்திற்கு சோற்றுக் கற்றாழையை தடவ வேண்டும். இதை ஜெல்லாக வாங்காமல் சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து கற்றாழை கீற்று எடுத்து சுத்தம் செய்து அதை முகத்தில் தடவுவதன் மூலம் மங்கு மறைவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அடுத்ததாக இந்த மங்கு பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் குங்குமாதி தைலம் என்று ஒரு தைலம் விற்கிறது. அதை வாங்கி முகத்தில் தடவுவதன் மூலம் கருந்திட்டுகளும் மங்கும் நீங்கும். பருக்கள் இருப்பவர்கள் இதை உபயோகப்படுத்தும் பொழுது ஒரு சிலருக்கு பருக்கள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் சற்று கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

கடைசியாக முக்கியமான ஒன்று என்னவென்றால் மங்கு, கருந்திட்டு, பருக்கள் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்தில் பயன்படுத்தக்கூடாது. சோப், ஃபேஸ் வாஷ், கிரீம் போன்ற எந்த கெமிக்கல் நிறைந்த பொருட்களின் உபயோகப்படுத்தாமல் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அடுத்ததாக உள்ளுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள் விட்டமின் சி அதிகம் இருக்கக்கூடிய பொருட்களாக பார்த்து தினமும் நாம் சாப்பிட வேண்டும். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வது நெல்லிக்காய் மற்றும் கொய்யாப்பழம். இதை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவிலேயே அவர்களுடைய மங்கு பிரச்சினை தீரும். இதே போல் சோற்றுக்கற்றாழையை சுத்தம் செய்து அதன் சாறை குடிப்பதன் மூலமும் நல்ல பலன் உண்டாகும். அடுத்ததாக எண்ணெய் சம்பந்தப்பட்ட எந்தவித உணவுப் பொருட்களையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆரோக்கியமான உணவுப் பொருட்களையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:குளிக்கும்போது செய்யவே கூடாத மூன்று தவறுகள்

எப்படி விட்டமின் சி அதிகம் இருக்கக்கூடிய பொருட்களை எடுக்க வேண்டும் என்று கூறினோமோ அதே போல் புரோட்டின் சத்து அதிகமாக இருக்கக்கூடிய பொருட்களையும் நாம் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் விரைவிலேயே மங்கு பிரச்சனை தீரும். கடைசியாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதும், சரியான நேரத்தில் உறங்குவதும், சரியான அளவு தண்ணீர் குடிப்பதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் …

சற்று முன்