நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும் பொழுது கண்டிப்பாக முறையில் நம்முடைய செல்வ வளமும் அதிகரிக்கும். ஆனால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் செய்யக்கூடிய முயற்சிகளுக்கு தடைகள் ஏற்படும்பொழுது அந்த தடைகளால் செல்வ வளம் பாதிக்கப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் பௌர்ணமி தினத்தன்று நாம் சில வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்யலாம். அதிலும் குறிப்பாக இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது ரோகினி நட்சத்திரத்துடன் ஆரம்பிக்கிறது என்பதால் அதற்கு இன்னும் அதிக பலன் இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தடைகள் நீங்கி செல்வ வளம் உயர்வதற்கு வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
கார்த்திகை பௌர்ணமி வெற்றிலை வழிபாடு
சந்திரனின் முழு ஆகர்ஷணத்துடன் திகழக்கூடிய நாளாக தான் பௌர்ணமி திதி திகழ்கிறது. அந்த நாளில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளம் என்பது அதிகரிக்கும். மகாலட்சுமி தாயாரை மட்டுமல்லாமல் மற்ற பிற தெய்வங்களையும் நாம் வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வங்கள் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பௌர்ணமி திதி அன்று வெற்றிலையை வைத்து நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை இரவு பௌர்ணமி வருகிறதோ அந்த நாளில் தான் செய்ய வேண்டும். முதலில் இதற்கு கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலைக்கு நடுவே நாம் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதற்கு சிறிது சந்தனம், சிறிது புனுகு, சிறிது பன்னீர் இவை மூன்றையும் கலந்து நம்முடைய மோதிர விரலை பயன்படுத்தி வரைய வேண்டும்.
பிறகு ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நடுவே குங்குமத்தை வைப்பதற்கு பதிலாக குங்குமப்பூவை வைக்க வேண்டும். இந்த குங்கும பூவிற்கு மேல் நம் வீட்டில் வெள்ளி நாணயம் இருக்கும் பட்சத்தில் அந்த வெள்ளி நாணயத்தை வைக்கலாம். வெள்ளிநாணயம் இல்லை என்பவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து இதை ஒரு தாம்பாளத்தில் வைத்து மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மகாலட்சுமி அஷ்டகம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற மகாலட்சுமிக்குரிய ஸ்லோகங்களை கூறி மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு அன்று இரவு சந்திர ஒளி எந்த இடத்தில் படுகிறதோ அந்த இடத்தில் இந்த தாம்பளத்தை கொண்டு போய் வைத்து விட வேண்டும். இரவு முழுவதும் சந்திர வெளிச்சம் படும் இடத்தில் இந்த நாணயமும் வெற்றிலையும் இருக்க வேண்டும். மறுநாள் காலையில் நாம் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு மேலே வைத்திருக்கக்கூடிய இந்த வெற்றிலை ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு வந்து மறுபடியும் பூஜை அறையில் வைத்து நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் உயர வேண்டும் என்ற வேண்டுதலை மேற்கொள்ள வேண்டும்.
பிறகு இதை அப்படியே மடித்து நம்முடைய பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று நாம் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளால் தடைப்பட்டு இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் தடையின்றி நடைபெறுவதோடு செல்வநிலையும் உயரும்.
இதையும் படிக்கலாமே:மருதாணி செடி வீட்டில் இருந்தால் இதை செய்யாதீர்கள்
மிகவும் எளிமையான இந்த வெற்றிலை வழிபாட்டை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரையும் சந்திர பகவானையும் நினைத்து செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும், செல்வ நிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.