- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

சகல பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்று நினைப்பவர்களும், இந்த பிரச்சினையில் இருந்து நம்மால் வெளியே வரவே முடியாது என்று நினைப்பவர்களும் ஆஞ்சநேயருக்கு இந்த ஒரு மாலையை சாற்றி வழிபாடு செய்தால் போதும். அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆஞ்சநேயர் வழிபாடு

என்றும் சிரஞ்சீவியாக வாழக்கூடிய தெய்வங்களில் ஒருவராக திகழ்பவர்தான் ஆஞ்சநேயர். இன்றளவும் இந்த பூலோகத்தில் வீற்றிருக்கிறார் என்றே கூறப்படுகிறது. ராம நாமம் ஒலிக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன் என்பதால் வைகுண்டத்திற்கு கூட செல்லாமல் இந்த பூவுலகிலேயே வீற்றிருக்கிறார் என்றும், ராம நாமம் யாருடைய இல்லத்தில் கூறப்படுகிறது அந்த இல்லத்தில் எழுந்தருளி அவர்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்றும் ஆஞ்சநேயரை பற்றி பல விதங்களில் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட ஆஞ்சநேயர் வழிபாட்டால் நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழி உண்டாகும். அதைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை தான் ஆரம்பிக்க வேண்டும். சனிக்கிழமை செய்பவர்களாக இருந்தால் தொடர்ச்சியாக சனிக்கிழமை தோறும் செய்து வரலாம். செவ்வாய்க்கிழமை செய்பவர்களாக இருக்கும் பொழுது தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வரலாம். இத்தனை வாரங்கள் என்று எந்த கணக்கும் இல்லை. நம்முடைய மனதிருப்திக்கு ஏற்றார் போல் நம்முடைய பிரச்சனையின் அளவிற்கு ஏற்றார் போல் நாம் அதை தொடர்ந்து கொள்ளலாம். தினமும் இந்த வழிபாட்டை மேற்கொள்வதும் சிறப்பான ஒன்றாகவே திகழும்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று செந்தூரம் மற்றொன்று துளசி. துளசியில் பெரிய இலைகளாக பார்த்து பறித்துக் கொள்ளுங்கள். துளசி குச்சியை பயன்படுத்தி செந்தூரத்தில் தொட்டு துளசி இலையில் ஸ்ரீராமா என்று எழுத வேண்டும். இப்படி குறைந்தபட்சம் 27 எண்ணிக்கையிலும் அதிகபட்சம் 108 எண்ணிக்கையிலும் நாம் எழுதலாம். எழுதி முடித்த பிறகு இதை அப்படியே ஒரு மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். வீட்டில் ஆஞ்சநேயரின் விக்ரகம் இருக்கும் பட்சத்தில் அந்த விக்கிரகத்தின் அளவிற்கு ஏற்றார் போல் இந்த துளசி இலை மாலையைக் கட்டி அவருக்கு சாற்ற வேண்டும்.

- Advertisement -

வீட்டில் ஆஞ்சநேயரின் விக்ரகம் இல்லை என்பவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்தில் இருக்கும் ஆஞ்சநேயரின் அளவைப் பொறுத்து 108 என்ற எண்ணிக்கையில் இலைகளை கட்டி மாலையாக போடலாம். பிறகு அவருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்யும்பொழுது ஏதாவது ஒரு பிரச்சினையை முன்னிறுத்தி அது சரியாக வேண்டும் என்று வழிபாடு செய்து கொள்ளுங்கள். அந்த பிரச்சனை தீர்ந்த பிறகு அவருக்கு பிடித்தமான தயிர்சாதம், மஞ்சள் நிறத்திலான லட்டு போன்றவற்றை வைத்து படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்.

நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று முழு மனதோடு ஆஞ்சநேயருக்கு இந்த ஒரு மாலையை சாற்றி வழிபாடு செய்பவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருளால் அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்