- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்.

கடன் தீர தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்.

- Advertisement -

மார்கழி மாதம் வரவிருக்கும் ஒவ்வொரு விஷேச நாட்களுக்குமே சிறப்பு தான். முருகனுக்கு ஒரு சிறப்பான நாள் என்றால் கேட்கவா வேண்டும். அந்த வகையில் நாளைய தினம் தேய்பிறை சஷ்டி திதியானது வரவேற்கிறது. அதாவது 20.12.2024 வெள்ளிக்கிழமையான இன்று காலை 11:00 மணிக்கு சஷ்டி திதி பிறந்து விட்டது.

நாளை சனிக்கிழமை மதியம் 12:00 மணி வரை இந்த சஷ்டி திதியானது இருக்கிறது. கோவில்களில் எல்லாம் சஷ்டி திதி நாளை தான் அனுஷ்டிக்கப்படும். சூரிய உதயத்தின் போது வரும் சஷ்டி திதி தான் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் இன்று (20-12-2024) இரவு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நாளைய தினம் சஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு வழக்கம் போல உங்கள் வீட்டில் எப்படி வழிபாட்டை மேற்கொள்வீர்களோ அதை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

மார்கழி தேய்பிறை சஷ்டி திதி

கடன் தீர, இன்று இரவு முருகனை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். முருகனுக்கு உகந்த தானியம் துவரம் பருப்பு. பணக்கஷ்டம் தீருவதற்கு மகாலட்சுமி உகந்தது ஏலக்காய். இந்த இரண்டு பொருட்களும் பரிகாரம் செய்ய தேவை. பெரும்பாலும் இந்த இரண்டு பொருட்களும் நம் வீட்டிலேயே இருக்கும்.

இன்று இரவு தூங்க செல்லும் போது ஒரு சதுர வடிவில் இருக்கும் சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு, 3 ஏலக்காய்களை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உங்கள் தலையை 6 முறை சுற்ற, ஒவ்வொரு முறையும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். மொத்தமாக 6 சுற்று, மந்திரத்தை 6 முறை உச்சரிக்கவும்.

- Advertisement -

கடன் தீர்க்கும் முருகன் மந்திரம்

“ஓம் ஷம் சரவணபவ”

பிறகு இந்த முடிச்சை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு முருகா என்னுடைய கடன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை விடியும் பொழுதில் காட்டிக் கொடு என்று பிரார்த்தனை செய்து கொண்டு, தூங்கச் செல்லுங்கள். சுத்தமான இடத்தில் ஒரு பாய் போட்டு விரிப்பு விரித்து தலையணைக்கடியில் இந்த முடிச்சை வைத்து தூங்குங்கள். மறுநாள் காலை எழுந்ததும் மீண்டும் இந்த மந்திரத்தை 6 முறை சொல்லி உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் பசு மாட்டிற்கு அல்லது பறவைகளுக்கு இரையாக போட்டு விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து குளித்த பின்பு இந்த வேலையை செய்தால் போதும். அதன் பிறகு வழக்கம் போல பூஜை அறையில் வெற்றிலை தீபம் ஏற்றுபவர்கள், அருங்கோண தீபம் ஏற்றி வேல் வழிபாடு செய்பவர்கள், வேல்மாறல் படிப்பவர்கள், கந்த சஷ்டி பதிப்பவர்கள் எல்லாம் நாளைய தினம் விரதத்தை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் தீராத கடன் சுமை நிச்சயம் தீரும். இதோடு மட்டுமல்லாமல் குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள், சொந்த வீடு வாங்க முயற்சி செய்பவர்கள், நல்ல வேலைக்காக முயற்சி செய்பவர்களும் நாளைய தினம் சஷ்டி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் தரும் தாமரை பூ

மேலே சொன்ன துவரம் பருப்பு பரிகாரம் வெறும் கடன் பிரச்சனைக்கு மட்டும்தான். மற்ற படி நீங்கள் வேறு ஏதாவது வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைக்க வேண்டும் என்றால், நாளை காலை முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். அதிலும் குறிப்பாக இது மார்கழி மாதம். நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் முடிந்தால் முருகன் கோவிலுக்கு சென்று 6 முறை முருகனை வளம் வந்து, ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை சொல்லி உங்கள் பிரார்த்தனையை வைத்து பாருங்கள். நீங்கள் கேட்டது சீக்கிரம் உங்கள் கையை வந்து சேரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்