மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். அதனால் தான் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் மார்கழி மாதம் என்பது மிகவும் விசேஷ கரமாக கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளின் ஒரு அவதாரமாக திகழக்கூடிய ராமர் அவதரித்த திதியான நவமி திதி திகழ்கிறது. அதுவும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய நவமி திதி அன்று எந்த முறையில் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய செல்வ தடைகள் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வம் சேர நவமி வழிபாடு
பெருமாள் பத்து அவதாரங்கள் எடுத்தார் என்றும் அதில் ஒரு அவதாரமாக திகழ்வதுதான் ராமர் அவதாரம் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். ராமர் அவதரித்த திதி தான் நவமி திதி. அதனால் தான் ராமநவமி என்று கொண்டாடுகிறோம். அப்படி வரக்கூடிய நவமி திதி என்பது மார்கழி மாதத்தில் வரும்பொழுது அதற்கு அதிகமான அளவு பலன்கள் இருக்கிறது என்று கூறவேண்டும் .அப்படி அதிக அளவு பலனை பெறக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக பெருமாளை வழிபாடு செய்பவர்கள் அனைவருமே ராமநவமியை கொண்டாடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய நவமி திதி அன்று ராமரை வழிபாடு செய்யும்பொழுது அவர்களுக்கு ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவர்களின் அருளை இன்னும் அதிக அளவில் பெற்று செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் ராமபிரானுக்குரிய நவமி திதி அன்று ராமபிரானை இந்த முறையில் வழிபாடு செய்தால் போதும்.
இதற்கு பெரிதும் நாம் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இரவு 8 மணி வரை நவமி திதி என்பது இருக்கிறது. அன்றைய தினத்தில் காலையிலிருந்து இரவு 8 மணிக்குள் ஸ்ரீராமஜெயம் என்னும் ராமபிரானின் இந்த நாமத்தை 308 முறை எழுத வேண்டும். அப்படி 308 முறை எழுத முடியாது என்று நினைப்பவர்கள் 308 முறை கூறவேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி ராமபிரானை நவமி திதி என்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய செல்வ தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ராம நாமம் கூறும் பொழுது நாம் எந்த வேண்டுதலை முன்வைத்து கூறுகிறோமோ அந்த வேண்டுதலை ஆஞ்சநேயர் வந்து நிறைவேற்றுவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:வெற்றிகள் கிடைக்க அஷ்டமி பரிகாரம்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதை போல ராமபிரானை நவமி திதியில் நாம் வழிபாடு செய்யும்பொழுது ராமபிரான் மற்றும் ஆஞ்சநேயர் இவர்கள் இருவரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.