- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமூன்று காலப் பாவங்கள் நீக்கும் திருநீறு

மூன்று காலப் பாவங்கள் நீக்கும் திருநீறு

- Advertisement -

திருமண், திருநீறு, விபூதி எனப்படும் இந்த சாம்பல் பிரசாதம் சிவனுக்கு உரியது ஆகும். எதுவுமே கையில் இல்லாமல் பிறந்து மீண்டும் எதுவுமே கையில் இல்லாமல் சாம்பலாக தான் கரைந்து போகும் இந்த பூத உடல் என்னும் தத்துவத்தை எடுத்துச் சொல்லக் கூடிய திருநீறு, தினமும் அணிபவர்களுக்கு துன்பம் நெருங்குவதில்லை! மூன்று காலங்களிலும் மனிதன் செய்யும் பாவங்களை எப்படி திருநீறு போக்கும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகிறோம்.

மூன்று காலம் என்பது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவை ஆகும். கடந்த காலத்தில் நாம் செய்த பாவங்களையும், நிகழ்காலத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்களையும், எதிர்காலத்தில் நாம் செய்ய போகும் பாவங்களையும் மன்னிக்கக் கூடிய ஒரே ஒரு சக்தி இந்த விபூதிக்கு மட்டுமே உண்டு. தினமும் விபூதி அணிபவர்களுக்கு பாவங்களை செய்ய வேண்டும் என்னும் எண்ணமே தோன்றாதாம்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து முடித்து குளித்து சுத்தபத்தமாக வெளியில் கிளம்பும் முன்பு பூஜை அறைக்குச் சென்று அங்குள்ள திருநீற்றை வலது கையில் மூன்று விரல்களால் எடுத்து பட்டை போல பூசிக் கொள்ள வேண்டும். இந்த மூன்று கோடுகளும் முக்காலத்தை குறிப்பவை ஆகும். முக்காலமும் நாம் செய்யும் பாவங்களில் இருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், நம் சிந்தையை ஒழுங்கு செய்யவும் கூடிய சக்தி வாய்ந்த குறியீடாகும். திருநீறு அணியும் பொழுது கீழ்காணும் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

திருநீறு அணியும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் இதோ:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே!

- Advertisement -

தினமும் திருநீறு அணியும் பொழுது, நெற்றியில் இருக்கும் நீரை உறிந்து, தலை பாரத்தை உண்டு பண்ணாமல் தடுக்கும். இதனால் நாம் யோசிக்கும் திறன் அதிகரிக்கும். மூளை சுறுசுறுப்பு அடையும், அடிக்கடி எதையும் மறக்காமல் நினைவாற்றலை அதிகரிக்கும். உடலும், மனமும் தூய்மை செய்யக் கூடிய இந்த திருநீறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தினமும் அணிவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
ரோஜா செடி வளர்க்க டிப்ஸ்

துன்பம் என்னும் இருளை போக்கி, இன்பம் என்னும் ஒளியை தரக்கூடியது திருநீறு! கடைசியில் மனிதன் ஒரு பிடி சாம்பலாக மாறிவிடுவான், எதுவும் மிஞ்சாது என்னும் தத்துவத்தை சொல்லுவதால், நாம் தினமும் அதை நெற்றியில் பூசும் பொழுது நான் தான் எல்லாம் என்னும் அகந்தை, ஆணவம், தலைகனம், செருக்கு, சினம், திமிரு, சுயநலம் போன்ற அனைத்தையும் இழந்து மனிதனை மாமனிதனாக மாற்றக் கூடிய சக்தி படைத்த ஒரு பொருள் திருநீறு. இந்த திருநீறு அணிவதன் மூலம் இறை சிந்தனை அதிகரிக்கும். திருநீறு வாசம் எப்பொழுதும் நம் மீது வீச நம் பார்வையில் இருக்கும் பாவங்கள் அகலும். யாரையும் தவறாக எண்ணாமல், அனைவரையும் ஒன்றாக பாவிக்க கூடிய நல்ல பழக்கவழக்கத்தை கொடுக்கும். இவ்வளவு நற்குணங்களை கொடுக்கக்கூடிய இந்த திருநீறு நீங்களும் தினமும் அணிந்து பாருங்கள், நீங்களே மிகப்பெரிய மாற்றங்களை உங்களுக்குள் காணலாம்.

சற்று முன்