நம்மில் பலரும் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். வாழுகின்ற காலத்தில் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை அருளக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயார் யாருடைய வீட்டிற்கும் எடுத்த உடனேயே செல்ல மாட்டார். அதே போல் யாருடைய வீட்டிலும் நிரந்தரமாக தங்கவும் மாட்டார். தனக்கு பிடிக்காத ஏதாவது ஒரு சிறிய செயல் அந்த குடும்பத்தில் நடந்து விட்டால் உடனே வெளியே வந்து விடுவார், தனக்கு பிடித்தமாதிரி இருக்கக்கூடிய வீட்டிற்குள் தான் செல்வாள் என்பது பலவிதமான புராணங்களில் இருந்து நம்மால் உணர முடியும். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சத்தை பெற
இந்த பதிவில் கூறக்கூடிய பரிகாரத்தை முழு மனதுடன் அடிக்கடி செய்து கொண்டே வந்தோம் என்றால் மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் வாசம் செய்வதை நம்மால் உணர முடியும். மேலும் மகாலட்சுமி தாயாரின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் நாம் செய்யலாம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்காக நாம் அதிக அளவில் எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.
எந்த ஒரு நற்பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டுமல்லவா? அதே போல் தான் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு குலதெய்வ கோவிலில் இருந்து குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். இந்த சந்தனத்தில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நெய்யை கலந்து தினமும் நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டு வர மகாலட்சுமியின் அருள் நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைக்கும்.
மேலும் 11 நாணயங்களை 11 நபர்களுக்கு தானமாக தரவேண்டும். அது எந்த நாணயமாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு ரூபாய் நாணயமாக இருந்தால் 11 நாணயம், இரண்டு ரூபாயாக இருந்தாலும் 11 நாணயம் என்று 11 என்ற எண்ணிக்கையில் 11 நபர்களுக்கு தானமாக தருவதன் மூலமும் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் தினமும் மதியம் 12 மணிக்குள் சூரிய பகவானுக்கு தீப ஆரத்தி காட்ட வேண்டும். இந்த தீபமானது நல்லெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சம அளவு கலந்து பஞ்சுத்திரி போட்டு ஏற்றி சூரிய பகவானுக்கு ஆரத்தி காட்டும் பொழுது மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:
கோடீஸ்வர யோகம் கிடைக்க பொங்கல் தினத்தன்று வாங்க வேண்டிய பொருள்
இந்த பரிகாரங்களில் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பரிகாரத்தையோ அல்லது அனைத்தையுமே செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.