அனுமன் என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது இராமாயணம். ராமர் போரில் வெற்றி பெற துணையாக இருந்தவர் அனுமன். அந்த ஈசனின் ஒரு அம்சம் தான் இந்த ஹனுமன். ஆஞ்சநேயர் என்றால் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வீரம், தைரியம், தன்னம்பிக்கை, பக்தி, மன உறுதி. ராம பக்தன், அனுமனை வழிபாடு செய்பவர்களுக்கு தோல்வி கிடையாது.
இது மட்டுமா நவகிரகங்களால் எந்த பாதிப்புகளும் உங்களை நெருங்கக் கூடாது என்றால் நீங்கள் அனுமன் வழிபாட்டை செய்ய வேண்டும். குறிப்பாக சனி பகவான் உங்களுக்கு துன்பத்தை கொடுக்கக் கூடாது என்றால், நீங்கள் அனுமனை வழிபாடு செய்து கொள்ளுங்கள். கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியங்கள் கூட உங்களை எதுவுமே செய்ய முடியாது.
இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்ட அந்த ஹனுமனுக்கே பிடித்த மூன்று ராசிகள் இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடியுமா. இந்த பட்டியலில் உங்களுடைய ராசி இருக்கிறதா என்று பாருங்கள். யார் ஹனுமானை வழிபாடு செய்தாலும் கை மேல் பலன் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதிலும் குறிப்பாக இந்த மூன்று ராசிகள் அனுமன் வழிபாடு செய்வதன் மூலம் கோடான கோடி பலனை பெறலாம் என்று சொல்கிறது ஜோதிடம். அந்த அதிர்ஷ்டசாலி பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்களா பார்ப்போமா.
கடகம்
முதலில் அனுமனுக்கு பிடித்த ராசி பட்டியலில் இருப்பது கடக ராசிக்காரர்கள். நீங்கள் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். ஏன் தெரியுமா. அனுமனுக்கு ரொம்பவும் பிடித்த, ராமர் பிறந்த ராசி, கடக ராசி. புனர்பூசம் நட்சத்திரம். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். அந்த ராமரின் பரிபூரண அருளும் கிடைக்கும். கடக ராசிக்காரர்கள் எதையும் தாங்கும் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வாழ்வில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், அதிலிருந்து வெளிவந்து போராடி வாழ்க்கையை வெற்றி பாதையை நோக்கி நடத்தி செல்வார்கள். கல்வி, கேள்வி, செல்வங்களில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் கடக ராசிக்காரர்களாக இருந்தால் இந்த சிறப்பு அம்சங்கள் எல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இன்று முதல் அனுமனை வழிபட மறக்காதீர்கள். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஸ்ரீ ராம ஜெயம், அல்லது ஜெய் ஆஞ்சநேயா என்ற நாமத்தை சொல்லுங்கள்.
சிம்மம்
அனுமனுக்கு பிடித்த ராசி பட்டியலில் இருக்கக்கூடிய அடுத்த ராசி, சிம்ம ராசி. கோவக்கார ராசி. பலசாலியான ராசி. இந்த சிம்ம ராசி, இந்த ராசியை எதற்காக அனுமனுக்கு ரொம்ப பிடிக்கும். சீதாதேவி பிறந்த ராசி, சிம்ம ராசி. மகம் நட்சத்திரம். ராமரை அனுமனுக்கு எந்த அளவுக்கு பிடிக்குமோ, அந்த அளவுக்கு சீதா தேவியையும் பிடிக்கும். அனுமன் ஒருமுறை தன்னுடைய இருதயத்தை பிளந்து காட்டும் போது கூட அவருடைய இதயத்திற்குள் ராமரும் சீதாகவும் தேவியும் ஒன்றாகத்தான் காட்சி கொடுத்தார்கள். இதுவும் நாம் எல்லோருக்கும் தெரியும்.
சீதாதேவி அனுமனை தன்னுடைய குழந்தையாக தான் பார்த்தாள். சீதாதேவி அனுமனை மகனை மகனே என்று தான் அழைப்பார்கள் என்பதும் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிம்ம ராசிக்காரர்கள் எப்போதுமே தைரியமாக துணிச்சலாக செயல்படுவார்கள். அதேபோல சிம்ம ராசிக்காரர்களும் யாருக்குமே கட்டுப்பட மாட்டார்கள். நீங்கள் சிம்ம ராசிக்காரர்களாக இருந்தால் அனுமனது நாமத்தை தினமும் ஒரு முறை என்னும் சொல்லுங்கள். ராமரையும் சீதா தேவியும் நீங்கள் ஒரு சேர வணங்குங்கள். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் பெருகும். தினம் தினம் உங்களுக்கு நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் முழுமையாக அனுமனின் அனுகிரகத்தை பெற்றவர்கள். ஏன் தெரியுமா? இது நம்மில் பல பேருக்கு தெரியும். ஹனுமன் பிறந்த நட்சத்திரமே தனுசு ராசி மூலம் நட்சத்திரம் தான். இந்த நட்சத்திரத்தைப் பற்றி நிறைய பேர் நிறைய குறை சொல்லுவார்கள். ஆனால் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிஜமாகவே அதிர்ஷ்டசாலிகள் தான். இவர்கள் கல்வி கேள்வி செல்வங்களில் சிறந்து விளங்குவார்கள். இவர்களும் யாருக்கும் அஞ்ச மாட்டார்கள்.
இதையும் படிக்கலாமே: மாட்டுப் பொங்கல் அன்று சொல்ல வேண்டிய கோமாதா மந்திரம்
அடுத்தவர்கள் உதவி செய்யக்கூடிய குணம் கொண்டவர்கள். இவர்கள் பாசத்திற்கு கட்டுப்படுவார்கள். இவர்களை நம்பி யாரேனும் வந்தால் அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார்கள். இத்தனை சிறப்பு அம்சங்களும் கொண்ட நீங்கள் தினமும் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கை எங்கோ சென்று விடும்.