இன்று தை அமாவாசை திதி. நம்மில் பெரும்பாலானவர்கள் முன்னோர்களை நினைத்து திதி தர்ப்பன படையல் வழிபாட்டை நிறைவு செய்திருப்போம். ஆனால் ஒரு சில பேருக்கு இந்த வழிபாட்டை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். வீட்டில் அமாவாசை வழிபாடு செய்யக்கூடிய வழக்கம் இருக்கிறது. ஆனால் இந்த மாதம் அமாவாசை, எங்களுடைய வீட்டில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழிபாட்டை நிறைவேற்ற முடியவில்லை என்பவர்களுக்கும் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் பயனுள்ளபடி இருக்கும்.
சில பேர் வீடுகளில் அமாவாசைக்கு முன்னோர்கள் வழிபாடு செய்யக்கூடிய வழக்கமே இருக்காது. அமாவாசை படையல் போடக்கூடிய வழக்கமே இருக்காது. உங்களுக்கும் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் பயனுள்ளபடி இருக்கும்.
முதலில் உங்களுக்கு அமாவாசை வழிபாடு செய்யக் கூடிய வழக்கம் இருந்தாலும் சரி, அல்லது வழக்கம் இல்லை என்றாலும் சரி, அந்த அமாவாசை திதி அன்று பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முன்னோர்களை ஒரு முறை நினைத்து, இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு காரணமாக இருந்த, அந்த மறைந்த முன்னோர்களுக்கு ஒரு நிமிடம் நன்றி செலுத்த வேண்டும். முன்னோர்களுக்கு நன்றி என்று சொல்லக்கூடிய, இந்த “நன்றி” என்ற வார்த்தை நம்முடைய தலைமுறையை தழைக்க வைக்கும்.
இன்று எந்த நேரமும் காலமும் பார்க்க வேண்டாம். நீங்கள் இருந்த இடத்தில் இருந்து “முன்னோர்களுக்கு நன்றி” என்ற வார்த்தையை சொல்லுங்கள். முன்னோர்களை ஆழ்மனதில் ஒரு முறை நினையுங்கள். அவர்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக செல்வ செழிப்போடு தழை தூங்கும். இது முதல் விஷயம்.
முன்னோர்களை நினைத்து இந்த நாளில் உங்கள் கையால் யாரேனும் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும். தானம் செய்யக்கூடிய பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கவில்லையா. இன்று இரவு தூங்கச் செல்லும் போது ஒரு கைப்பிடி அரிசி மாவில், ஒரு ஸ்பூன் சர்க்கரையோ வெல்லமோ சேர்த்து கலந்து உங்கள் வீட்டு வாசலில் கொண்டு போய் மண் பாங்கான இடத்தில் தூவி விட்டு வந்து விடுங்கள். அங்கு வரும் வாயில்லா ஜீவன்கள் இன்று அந்த உணவை சாப்பிட்டு உங்களை வாழ்த்தினாலே போதும் முன்னோர்கள் சாபம், முன்னோர்கள் தோஷம், பித்ரு தோஷம் எல்லாம் உங்கள் குடும்பத்தை விட்டு நீங்கும். அன்னதானம் செய்யாதவர்களுக்கு இந்த பரிகாரம்.
மேல் சொன்ன இரண்டு விஷயங்களையும் எல்லோருமே செய்யலாம். தவறு கிடையாது. பின் சொல்லக்கூடிய இந்த விஷயத்தை முன்னோர்கள் வழிபாட்டை தவறவிட்டவர்கள் மட்டும் செய்யுங்கள். எங்கள் வீட்டில் முன்னோர்களுக்கு படையல் போடக்கூடிய வழக்கம் இருக்கு. திதி தர்ப்பணம் கொடுக்கக் கூடிய வழக்கம் இருக்கு, ஆனால் நாங்கள் இந்த வழிபாட்டை தவறவிட்டு விட்டோம். இதன் மூலம் எங்கள் குடும்பத்திற்கு எந்த ஒரு தோஷமும், சாபமும் வந்து விடக்கூடாது என்றால், என்ன செய்வது.
இன்று மாலை 6 மணிக்கு உங்கள் நிலை வாசல் படிக்கு உள்பக்கமாக ஒரு தாம்பூல தட்டில் முன்னோர்களை நினைத்து ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வையுங்கள். ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் வைத்து விடுங்கள். இந்த விளக்குக்கு முன்பாக முன்னோர்கள் வழிபாட்டை தவறவிட்டதற்காக, முன்னோர்களிடமே ஒரு மன்னிப்பை கேட்டுக் கொண்டு, முன்னோர்களின் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அந்த விளக்கையும் அந்த தண்ணீரையும் இன்று இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் விநாயகர் பரிகாரம்
விளக்கு தானாக எரிந்து மலை ஏறிவிடும். அந்த டம்ளர் தண்ணீர் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை அந்த தண்ணீரை எடுத்து செடி கொடிகளுக்கு ஊற்றிவிட்டு, விளக்கை சுத்தம் செய்து உள்ளே எடுத்துக் கொள்ளலாம். இன்று முன்னோர்கள் வழிபாட்டை தவற விட்டவர்களுக்கு இந்த பரிகாரம் நல்லதொரு உதவியாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மேல் சொன்ன விஷயங்கள் நன்மையை தரும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.