பௌர்ணமி என்பது தெய்வ வழிபாட்டிற்கு உரிய தினமாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் நாம் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக பெண் தெய்வ வழிபாடு என்பது நம்முடைய வாழ்க்கையை மிகவும் சிறப்பு மிகுந்ததாக மாற்றும். அந்த வகையில் பெண் தெய்வங்களின் உக்கிர தெய்வமாக திகழக்கூடியவள் வாராகி அம்மன். வராகி அம்மனை பங்குனி பௌர்ணமி நாளன்று இந்த முறையில் வழிபாடு செய்ய நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை தீர்க்கும் வழிபாடு
பங்குனி பௌர்ணமி என்பது சனிக்கிழமை அன்று வருகிறது. பொதுவாக சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளின் மறு அவதாரமாக திகழக்கூடிய அவதாரம் தான் வராக மூர்த்தி. வராக மூர்த்தியின் பெண் அம்சமாக திகழக் கூடியவள் தான் வாராகி அம்மன். அதனால் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று வாராகி அம்மனை நாம் கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
பௌர்ணமி என்பது விடியற்காலையிலேயே தொடங்கி விடுகிறது என்பதால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை அந்த நேரத்தில் செய்ய இயலவில்லை என்றால் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.
இந்த வழிபாட்டிற்கு முதலில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் ஒரு கைப்பிடி அளவு நவதானியத்தை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் சிறிதளவு மட்டும் வெல்லத்தை தூவ வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது வாராகி அம்மனே எழுந்தருள வேண்டும் என்று கூறிக்கொண்டே ஏற்றுங்கள். பிறகு இந்த தீபத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
இந்த தீபத்திற்கும் முன்பாக ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதில் வாராகி அம்மனின் பின்வரும் மந்திரத்தை 111 முறை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், சுண்டல், புளி சாதம், உளுந்து வடை, பானகம் போன்ற ஏதாவது ஒன்றை வைக்கலாம். இப்படி நாம் வழிபாடு செய்வதன் மூலம் வாராகி அம்மனின் அருளால் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
“ஓம் ஐம் க்ரீம் ஸ்ரீம் வஜ்ர கோஷ வாராஹியே நமோ நமஹ”
இதையும் படிக்கலாமே:வாழ்க்கையை மாற்றும் பௌர்ணமி வழிபாடு
உக்கிர தெய்வமாக திகழக்கூடிய வாராகி அம்மனை முழு நிலவு இருக்கக்கூடிய நாளில் இந்த முறையில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.