- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையை மாற்றும் பௌர்ணமி வழிபாடு

வாழ்க்கையை மாற்றும் பௌர்ணமி வழிபாடு

- Advertisement -

வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய கடைசி சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வதுதான் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி. பௌர்ணமி அன்று நாம் வழிபாடு செய்வது என்பது பலரும் பின்பற்றக்கூடிய ஒன்றுதான். இருப்பினும் இந்த பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது சனிக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தரும். இந்த நாளில் நாம் வழிபாடு செய்வதன் மூலம் சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நம் வாழ்வில் இதுவரை இருந்து வந்த தோல்விகளும் தடைகளும் விலகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எளிமையான பௌர்ணமி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வாழ்க்கையை மாற்றும் வழிபாடு

பொதுவாகவே பௌர்ணமி என்பது பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு கூறியதாக திகழக்கூடியது. அதேபோல் சிவபெருமான் வழிபாட்டிற்கும் உகந்ததாகவே பௌர்ணமி திதி திகழ்கிறது. இது மேலும் சனிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் பெருமாளை வழிபாடு செய்வதற்கு உரிய நாளாகவும் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கக்கூடிய நாளாகவும் இது திகழ்கிறது. இவ்வளவு அற்புதமான இந்த பங்குனி பௌர்ணமி நாளில் நாம் நம்முடைய வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை முழு நிலவு வானில் தெரியும் பொழுது செய்ய வேண்டும். மாலை எந்த நேரத்தில் சந்திர பகவான் முழுமையாக வானத்தில் தெரிகிறாரோ அப்பொழுது இந்த வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். மாலை 6:00 மணிக்கு எப்பொழுதும் போல் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் சந்திர பகவானுக்குரிய தானியமான பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் மூன்று எண்ணிக்கையில் மஞ்சள் கிழங்கை வைக்க வேண்டும். எந்த மஞ்சள் கிழங்காக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மஞ்சள் கிழங்கு தான் வைக்க வேண்டும். மஞ்சள் தூளை பயன்படுத்தக் கூடாது.

இந்த மூன்று மஞ்சள் கிழங்கிலும் ஒரு குங்குமப்பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஐந்து ரூபாய் நாணயம் அல்லது ஒரு ரூபாய் நாணயம் அல்லது வெள்ளி நாணயம் இவற்றில் எது கிடைக்கிறதோ அதையும் வைத்துவிட்டு சந்திரன் முழுமையாக எந்த இடத்தில் பார்த்தால் தெரிவாரோ அந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். சந்திர பகவானை பார்த்து இந்த தட்டை காண்பித்த வண்ணம் எங்கள் வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் பெருக வேண்டும் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகளும் தோல்விகளும் நீங்க வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொண்டு “ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ” என்னும் சந்திர பகவானின் மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த தாம்பாள தட்டை அப்படியே எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அன்று இரவு முழுவதும் இது பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலையில் தீபம் ஏற்றும் பொழுது மஞ்சள் கிழங்கை எடுத்து நம்முடைய பயன்பாட்டிற்கு நாம் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் பச்சரிசியை பறவைகளுக்கும் எறும்பிற்கும் தானமாக போட்டு விட வேண்டும். நாணயத்தை செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பங்குனி பௌர்ணமி நாளன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கி நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கையை அருளும்.

இதையும் படிக்கலாமே:பௌர்ணமி மகாலட்சுமி பூஜை
முழு மனதோடு எந்தவித சந்தேகமும் இல்லாமல் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று இந்த முறையில் சந்திர பகவானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையே மாறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்