- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் அருகம்புல் விநாயகர் மந்திரம்

கடன் தீர்க்கும் அருகம்புல் விநாயகர் மந்திரம்

- Advertisement -

கோடி கோடியாய் கடன் வாங்கி கஷ்டப்படுபவர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்முடைய தகுதிக்கு நாம் வாங்கி இருக்கும் கடனே அதிகம் தான். எனக்கு வெறும் ஒரு லட்ச ரூபாய்,  அல்லது பத்தாயிரம் ரூபாய் மட்டும்தான் கடன் இருக்கிறது என்று கஷ்டப்படுபவர்களும் இந்த பரிகாரத்தை இன்று செய்யலாம். இன்று சங்கடஹர சதுர்த்தி. எந்த சங்கடங்கள் உங்களை விட்டு விலக வேண்டும் என்றாலும், இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு செய்யலாம்.

கடன் சுமையால் ரொம்பவும் அவதிப்பட்டு வருபவர்கள், இன்றைய தினம் வீட்டில் இருந்தபடியே மிக மிக எளிமையான முறையில், விநாயகர் வழிபாட்டை எப்படி செய்வது? ஒரு எளிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் தான் இது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு அருகம்புல்லும், மஞ்சள் பிள்ளையார் இருந்தாலே போதும். வழிபாட்டை மனநிறைவோடு செய்ய உங்கள் மனதில் கொஞ்சம் நம்பிக்கையும் கூடவே தேவைப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இன்று மாலை இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -

இன்று மாலை வழக்கம் போல பூஜையறையை பூக்களால் அலங்காரம் செய்து கொண்டு, விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு வெற்றிலையின் மேல் அல்லது வாழை இலையின் மீது, ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு ஒரு குங்குமப்பொட்டு வைத்து, மஞ்சள் பிள்ளையாருடைய தலையில் கொஞ்சம் அருகம்புல் சொருகிவிட வேண்டும். உதிரி அருகம்புல்லை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த அருகம்புல்லை, பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் விநாயகருக்கு மேலே போட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்யும் போது கட்டாயம் சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரம் இதுதான். இந்த மந்திரத்திற்கு அபரிவிதமான சக்தி இருக்கிறது.

- Advertisement -

கஷ்டங்களை உடனடியாக தீர்க்கும் சக்தி இருக்கிறது. கடன் சுமையை குறைக்கும் சக்தி இருக்கிறது. அருகம்புல்லை விநாயகரது சிரசில் போடும்போது, விநாயகருடைய மனம் குளிர்ச்சி அடையும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போதும் மேலும் அவருடைய மனதுக்கு குளிர்ச்சி அடைந்து, நீங்கள் கேட்ட வரங்களை எல்லாம் வாரி வாரி கொடுத்து விடுவார். இன்றைய தினம் நீங்கள் சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரம் இதோ.

விநாயகர் மந்திரம்

ஓம் நமோ வராதபதயே நமோ கணபதயே நம !

- Advertisement -

108 முறை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை சொல்லி இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். வீட்டில் இந்த பூஜையை செய்ய முடியாது என்பவர்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலையை விநாயகருக்கு வாங்கிக் கொடுத்து, விநாயகர் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தைச் சொன்னாலும் உங்கள் கடன் சுமை குறையும்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக பிள்ளையார் சுழி பரிகாரம்

விநாயகரை மூன்று முறை வலம் வரும்போதும் இந்த மந்திரத்தை சொல்லி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்களுடைய கையில் சிதறு தேங்காயை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்லி சித்தருகாய் உடைத்தாலும் உங்களுடைய துன்பங்கள் தடைகள் கஷ்டங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை. அதி சக்தி வாய்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்