- Advertisement -
Homeஜோதிடம்ராகு கேது பெயர்ச்சிராகு கேது பெயர்ச்சி பலன் 2025

ராகு கேது பெயர்ச்சி பலன் 2025

- Advertisement -

விசுவாவசு வருடத்தின் ராகு கேது பெயர்ச்சியானது நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. 26-4-2025 சனிக்கிழமை அன்று வாக்கிய பஞ்சாயத்தின் படி, மாலை 4:28 மணிக்கு ராகு கேது பெயர்ச்சியாக போகிறார்கள். ராகு பகவான், மீன ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். கேது பகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பதை பற்றிய பொதுப்படையான பலனைத் தான் இன்றைய ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கான லாபத்தை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. புதுசாக தொழில் துவங்கலாம். இருக்கும் தொழிலை விரிவு படுத்தலாம். புது வேலை தேடலாம். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வரக்கூடிய பணத்தில் புதுசாக சொத்து சுகம் வண்டி வாங்க கூடிய யோகங்களும் இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் ஆபரண ஆடை சேர்க்கை இருக்கும். சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். குடும்பத்தோடு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வெள்ளருக்கன் பிள்ளையாரை வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்ய இன்னல்கள் விலகும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை அனுபவித்த துன்பங்களுக்கு எல்லாம் இனி வரும் காலகட்டத்தில் விமோசனம் கிடைக்கப் போகிறது. நீங்கள் எடுத்த கெட்ட பெயர்கள் எல்லாம் விலகும். உங்கள் மீது விழுந்த அனாவசிய பழி விலகும். உங்கள் மீது தவறு இல்லை என்று நிரூபித்து, தலை நிமிடக்கூடிய காலம் இது. வேலை வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, நிம்மதியான ஒரு சூழ்நிலைக்கு வருவீர்கள். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அந்தஸ்த்து உயரும். உடல் உபாதைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவுகளோடு கவனமாக பேச வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. அரச மரத்தடி விநாயகரை வழிபட துன்பங்கள் விலகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பிரம்மாண்டமான வெற்றியை கொண்டு வந்து தரப் போகிறது. இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். வேலை, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் நல்லபடியாக வெற்றியைத் தரும். எதிர்காலத்திற்கு தேவையான  சேமிப்பை இப்போது துவங்கினால், அந்த சேமிப்பு நல்ல லாபகரமான முடிவை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அடுத்த ஒரு வருடங்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு, உடன் பிறந்தவர்களோடு பேசும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். சித்தர்கள் வழிபாடு உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒன்றரை வருடத்திற்கு மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து உங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். வீட்டில் இருந்த குடும்ப சண்டைகள் சரியாகும். இதுநாள் வரை சூழ்நிலை கைதியாக இருந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட, இனிமேல் சுதந்திரமாக வெளியில் வலம் வருவீர்கள். அடிமை வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைக்கும். சந்தேகங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். அஷ்டமத்து சனியில் சிக்கி இருந்த கடக ராசி அன்பர்களுக்கு விடுதலை கிடைக்கக்கூடிய காலம் இது. குடும்ப உறவுகளோடு பேசும்போது கவனம் தேவை. அடுத்தவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிக மிக நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள். கூடுதல் நன்மை கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை தூக்கி தலையில் போட்டுக்கொண்டு உங்களை நீங்களே வருத்திக் கொள்ளக் கூடாது. மன அழுத்தம் ஏற்படாமல் உங்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணங்களின் போது, வண்டி வாகனத்தை ஓட்டும் போது எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சனைகள் பெருசாக வரும் என்று சொல்லவில்லை. ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. முதலில் உடல் ஆரோக்கியத்தை பார்க்க வேண்டும். தேவையற்ற கவலைகளை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக சென்றாலும் டென்ஷன் கொடுக்கும் விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். மற்றபடி சொத்து வாங்கும் யோகம் இருக்கிறது. பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கிறது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம் அல்லது சித்தர்கள், மகான் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். இனி வரும் காலகட்டத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் எல்லாம் ஒவ்வொன்றாக படிப்படியாக உங்களை விட்டு விலக துவங்கும். தேவையற்ற குழப்பங்கள் சந்தேகங்கள் விலகி மன நிம்மதியும் நல்ல தூக்கமும் இனி வரக்கூடிய காலகட்டத்தில் உங்களை வந்து சேரும். வேலையில் முழு கவனம் இருக்க வேண்டும். நாலு பேர் வேலையை உங்கள் தலையில் கட்டி விட வாய்ப்புகள் இருக்கிறது. உஷாராக இருங்க. எந்த இடத்திலும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உரிமைக்காக போராட வேண்டும். உங்களுக்கு தேவையான விஷயங்களை நீங்கள் தான் பேசி சரி செய்ய வேண்டும். அமைதியாக இருந்தால் நிச்சயம் உங்களை ஏமாளியாகி விடுவார்கள். பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் மீனாட்சி அம்மனை நம்பிக்கையோடு கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒன்றரை வருடம் ராஜ வாழ்க்கை வரப்போகிறது. வேலை வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். காதல் கைகூடும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற டென்ஷன் எல்லாம் தானாக உங்களை விட்டு விலகும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான நன்மைகளை செய்வீர்கள். சேமிப்பு உயரும். கடன் சுமை குறையும். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும் உங்களுடைய ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை வெளி மனிதர்களிடம் சொல்லக்கூடாது. புதுசாக ஒரு நண்பரை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு பயணம் செய்யும்போது எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கையோடு முருகனின் பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு சிந்தனைகள் தாறுமாறாக இருக்கும். எல்லா விஷயத்திலும் ஒரு சந்தேகம் இருக்கும். யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டீங்க. ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்தித்து பல வகையான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களை அடுத்தவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. அந்த அளவுக்கு குழப்பமான ஒரு நபராக காட்சி தருவீர்கள். ஆனால் உங்களுக்கு எது நல்லது என்பது உங்களுக்கு நன்றாகவே புரியும். நீங்க குழம்ப மாட்டீங்க. அடுத்தவர்களை குழப்பி விடக்கூடிய வேலையை நன்றாகவே செய்வீர்கள். அதற்காக இதை சங்கடமான காலம் என்று சொல்லி விட முடியாது. உங்களுடன் இருப்பவர்களுக்கு இது சங்கடமான காலம் என்று சொல்லலாம். மற்றபடி வியாபாரம் தொழில், பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் சீராகத்தான் இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. புதிய பாட்னரை சேர்க்கும்போது கவனம் தேவை. புதிய பாட்னரை ஒதுக்கி வைக்கும் போதும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினமும் அம்மனை வழிபாடு செய்தாலும் தவறு கிடையாது. அம்பாள் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த ஒரு வருடத்தில் விட்ட பணத்தை எல்லாம் திரும்பவும் பிடித்து விடலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விடலாம். தோல்வியை மட்டுமே பார்த்து வந்த தனுசு ராசிக்காரர்கள், இனி வரக்கூடிய காலத்து காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் அமோகமாக பார்க்கப் போகிறீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் கேட்ட பதவி, கேட்ட சம்பளத்தோடு நல்ல வேலை கிடைக்கும். இடமாற்றமும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த ஒரு வருடம் உங்களுக்கு நன்மைகளை ராகு கேது வாரி வாரி வழங்கப் போகிறார். சனிபகவானால் வந்த துன்பங்கள் இந்த ஒரு வருடத்திற்கு கொஞ்சம் விலகி இருக்கும். இந்த ஒரு வருட கால கட்டத்திற்கு பிறகு நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அகல கால் வைக்க கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வேலை தொழில் எல்லாம் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கடன் சுமை குறையும். புது வேலை கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கி சீக்கிரமே நீங்கள் நினைத்த வேலை உங்கள் கையை வந்து சேரும். அப்படியே வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பாராத பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்கும் அளவுக்கு உங்களுடைய மனதில் தென்பும் தைரியமும் இருக்கும். அதெல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால், குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்லக்கூடாது. வீட்டு பிரச்சினைகளை கொண்டு போய் வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நேரத்திற்கு சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட வேண்டும். உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அடுத்த 1 வருடத்திற்கு கட்டுப்பாடு வச்சுக்கோங்க. பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது நல்லது. தினமும் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும். விநாயகர் வழிபாட்டை தவறவிட வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இனி வரும் காலகட்டத்தில் அபரிவிதமான முன்னேற்றம் இருக்கும். காரியத்தடை விலகும். எடுத்த முயற்சிகள் எல்லாம் நல்லபடியாக வெற்றியை கொடுக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வருமானம் சீராகும். இதுநாள் வரை பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு விமோசனம் கிடைக்கப் போகிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், நீங்கள் நிதானத்தை இழக்கக்கூடாது. எப்போதுமே பொறுமையாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால், வாழ்வில் இன்னும் சீக்கிரம் முன்னேறி விடலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அனுமன் வழிபாடு பிள்ளையார் வழிபாடு உங்களுக்கான நன்மையை கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வருடம் அமோகமான வெற்றி தரும் நாட்களாக இருக்கப் போகிறது. வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாட்களாக நல்ல வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, நிரந்தர சம்பளத்தோடு, நிரந்தர வேலை கிடைக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். பொருளாதார நிலமை கொஞ்சம் உயர தொடங்கும். சேமிப்பும் அதிகரிக்கும். இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் கிடைக்காத மகிழ்ச்சி, இனி வரக்கூடிய காலகட்டத்தில் கிடைக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக வெளியூருக்கு சென்று நேரத்தை செலவழிக்க கூட வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்ல அனுகூலத்தை தரும்.

சற்று முன்