- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினை தீர்க்கும் ஞாயிறு அமாவாசை பரிகாரம்

கடன் பிரச்சினை தீர்க்கும் ஞாயிறு அமாவாசை பரிகாரம்

- Advertisement -

இன்றைய காலத்தில் பலருக்கும் பிரச்சினையாக திகழக்கூடியது தான் கடன் என்னும் பிரச்சினை. கடன் வாங்கினாலும் பிரச்சினை தான். கொடுத்தாலும் பிரச்சினைதான். அதிலும் கடனை வாங்கியவர்களுக்கு அதிக அளவில் பிரச்சினைகள் ஏற்படும். ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அந்த கடனை திரும்ப அடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். மேலும் அதனால் குடும்பத்தில் பலவிதமான சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இப்படிப்பட்ட கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு நாம் சற்று கடினமாக உழைத்தாலும் கூட நவகிரகங்களின் அருள் இருந்தால்தான் அந்த கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியும். அப்படி கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஞாயிறு அமாவாசை பரிகாரம்

பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக இருக்கக்கூடிய நாட்களில் நாம் செய்யக்கூடிய பரிகாரத்திற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள். அதேபோல் பரிகாரங்களையும் செய்கிறார்கள். அந்த வகையில் அமாவாசை தினத்தன்று நாம் செய்யக்கூடிய இந்த ஒரு பரிகாரம் நம் வாழ்வில் இதுவரை பட்ட கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வர உதவும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்குரிய கிழமை அன்றைய தினத்தில் அமாவாசை வருவது என்பது கூடுதல் சிறப்பை தருகிறது. அன்றைய தினத்தில் வரக்கூடிய எமகண்ட நேரம் என்று கூறக்கூடிய 12 மணியிலிருந்து 1:30 மணிக்குள் இந்த ஒரு பரிகாரத்தை நாம் செய்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை வீட்டிற்குள் இருந்து செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கு வெளியே வந்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். யாருக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறதோ அவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமே தவிர்த்து அவர்களுக்காக வேறு யாரும் செய்யக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கதே.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு கொள்ளு வேண்டும். ஒரு ஸ்பூன் அளவிற்கு கொள்ளு இருந்தால் போதும். யாருக்கு கடன் பிரச்சினை இருக்கிறதோ அவர்கள் தங்களுடைய இடது கையில் ஒரு ஸ்பூன் அளவுக்கு கொள்ளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து கிழக்கு திசை பார்த்தவாறு நின்று கொள்ள வேண்டும். பிறகு என்னுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று முழு மனதோடு நினைத்துக் கொண்டும் கூறிக் கொண்டும் தங்களுடைய தலையை தாங்களே வலம் இருந்து இடமாக ஏழுமுறையும் இடமிருந்து வளமாக ஏழுமுறையும் சுற்ற வேண்டும். பிறகு இந்த கொள்ளை எறும்புகள் பறவைகள் போன்றவற்றிற்கு போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

- Advertisement -

வீட்டிற்கு வந்ததும் குளிக்க வேண்டும் என்பது அவசியம். தலைக்கு குளிக்க இயலாது என்று நினைப்பவர்கள் தலையில் மூன்று முறை தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக முறையில் குளிக்க வேண்டும். இப்படி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அமாவாசை தினத்தன்று ராகு காலத்தில் கேதுவிற்குரிய தானியமான கொள்ளை வைத்து நாம் இப்படி பரிகாரம் செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:மகாலட்சுமி கடாட்சத்தைப் பெற அமாவாசை வழிபாடு

பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த அமாவாசை தினத்தன்று எமகண்ட நேரத்தில் முழு மனதோடு இந்த ஒரு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்