- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமாங்காய் சட்னி செய்முறை

மாங்காய் சட்னி செய்முறை

- Advertisement -

வருடத்தில் 12 மாதங்கள் வரும். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான பழங்கள் அதிக அளவில் விளையும். அந்த பழங்களை நாம் உண்ணுவதன் மூலம் அந்த பழங்களால் கிடைக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இது கோடை காலத்தில் மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விளைச்சல் என்பது அதிகமாகவே இருக்கும். அதனால் நம்மால் இயன்ற அளவு மாங்காயையும் மாம்பழத்தையும் உட்கொள்வதன் மூலம் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்களை பெற முடியும். அந்த வகையில் மாங்காயை வைத்து அனைவரும் சுவைத்து சாப்பிடும் வகையில் மாங்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – ஒன்று
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 6 பல்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – ஒன்று
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

- Advertisement -

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் தக்காளியை எடுத்து பாதியாக நறுக்கி அந்த எண்ணெயில் குப்புற கவுத்தி வைத்து விடுங்கள். இதே போல் மாங்காயையும் பாதியாக நறுக்கி அதன் தோல் பகுதி மேலே தெரிவது போல் குப்புற போட்டு விட வேண்டும். பூண்டின் தோலை நீக்கிவிட்டு பூண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை லேசாக கீரி சேர்த்து மூடி போயிட்டு ஐந்து நிமிடத்தில் இருந்து பத்து நிமிடம் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இதில் இருக்கும் மாங்காய், பூண்டு, தக்காளி அனைத்தும் நன்றாக வெந்திருக்கும். இது வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். இது நன்றாக ஆரட்டும். ஆரிய பிறகு மாங்காய் மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதம் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். மாங்காயின் தோல் பகுதியை மட்டும் விட்டுவிட்டு அதன் சதை பகுதிகளை ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக வலித்து அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒன்றிரண்டாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை அதில் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், உப்பு, கைப்பிடி அளவு கொத்தமல்லியையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். இந்த சட்னி நைசாகவும் அரைபடக்கூடாது ஒன்று இரண்டாகவும் இருக்கக் கூடாது. அந்த பக்குவத்தில் அறிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான மாங்காய் சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே:கருவேப்பிலை மிட்டாய் செய்முறை

சீசனுக்கு கிடைக்கக்கூடிய காய்கனிகளை வைத்து அந்த சீசன் முடிவதற்குள் சுவையான முறையில் உணவுப் பொருட்களை தயார் செய்யலாம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மாங்காய் சீசன் முடிவதற்குள் மாங்காய் சட்னியை ஒரு முறை செய்து கொடுங்கள்.

சற்று முன்