- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவருமானம் விரைவில் அதிகரிக்க எளிய பரிகாரம்

வருமானம் விரைவில் அதிகரிக்க எளிய பரிகாரம்

- Advertisement -

இன்றைய சூழலில் எல்லோருடைய முக்கிய தேவையும் பணம் தான். இந்த பணத்தை சம்பாதிக்க தான் இரவும் பகலும் பாடுபடுகிறோம். அப்படி பாடுபட்டாலும் கூட நம்முடைய தேவைகளை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு வருமானம் வருகிறதா? என்றால் அது பெரும்பாலானோர் வாழ்க்கையில் கேள்வி குறி தான். ஆனால் ஒரு சிலரை பார்த்தால் சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் சேமித்து பல மடங்கு பெருக்கி வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்வார்கள். இவர்களைப் பார்க்கும் போது நாமும் இப்படி எப்போது நல்ல முறையில் வாழ்வோம் என்ற ஏக்கம் வருவது இயல்பு தான். அப்படியான ஏக்கம் மாறி நாமும் நல்ல முறையில் சம்பாதித்து வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக சில பரிகார முறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வருமானம் உயர பரிகாரம்

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் தினக்கூலி வாங்குவோராகவோ அல்லது மாதந்திர வருமானம் ஈட்டுபவர்களாவோ தான் இருக்கிறார்கள். அப்படி ஈட்டுபவர்கள் அன்றைய வேலைக்கான கூலி அல்லது மாதத்திற்கான வாருமானத்தை மட்டும் தான் வாங்க முடியும். அதற்கு மேலும் சம்பாதிக்க எத்தனை முயற்சி செய்தாலும், பலருக்கு அது எட்டா கனி தான். ஆனால் ஒரு சிலரை பார்த்தால் இதே முறையில் சம்பாதித்தாலும் கூட வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். நாமும் அப்படி முன்னேற சில வழிமுறைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வழிமுறைகள் என்ன என்பதை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முதலில் வருமானத்தை பெருக்குவதற்காக செய்யப்படும் இந்த பரிகார முறைகளை செய்வதற்கு நாம் மனதளவில் நம்முடைய வருமானம் மேலும் உயரும், நம்மாலும் நம்முடைய வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சேர்த்து இந்த பரிகாரத்தை முழுநம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் நம்முடைய எண்ணத்திற்கு இருக்கும் சக்தியானது வேறு எதற்கும் இல்லை என்பதனை முதலில் நாம் உணர வேண்டும்.

சம்பளம் வாங்கியவுடன் அதை வரும் வழியிலே செலவு செய்து விடாமல் நேரடியாக வீட்டிற்கு தான் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்த பணத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்த பின் செலவு செய்தால் அது பல மடங்கு பெருகக்கூடிய வாய்ப்பு உருவாகும். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு சிறிய தட்டு எடுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிகப்பு நிற துணியை போட்டு அதன் மேல் சிறிதளவு பச்சரிசியை பரப்பி விடுங்கள். அந்த அரிசியின் மேல் நீங்கள் வாங்கி வந்த சம்பளப் பணத்தை வைக்க வேண்டும். மேலும் இத்துடன் ஏதேனும் ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். அது ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த முறையை உங்களுடைய பூஜை அறையில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜையை செய்யும் பொழுது உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வம் என யாரை வேண்டுமானாலும் மனதார நினைத்துக் கொண்டு செய்யலாம். அப்படி வைத்து பூஜை செய்த பணத்தை குறைந்தது மூன்று மணி நேரம் பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இதற்கிடையில் பணத்தை நாம் எடுக்கக் கூடாது. அப்படி பணத்தை வைக்கும் பொழுது நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது இன்னும் இந்த பரிகாரத்திற்கு பல மடங்கு பலனை பெருக்கி தருவதாக அமையும்.

அதன் பிறகு அந்த சம்பள பணத்திலிருந்து சிறிதளவு பணத்தை எடுத்து வைக்க வேண்டும். அது ஒரு ரூபாய் நாணயமாக இருக்கலாம் அல்லது பத்து ரூபாய் அல்லது 100 ரூபாயாக. கூட இருக்கலாம். உங்களுடைய வசதியை பொறுத்து ஏதேனும் ஒரு சிறிய தொகையை சிகப்பு நிற துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த பண முடிச்சை உங்களுடைய பீரோவில் வைத்து விடுங்கள். இதை எடுக்கக் கூடாது அப்படியே பீரோவில் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் வைத்து வணங்கிய பச்சரிசியை எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிகப்பு நிற துணியை எடுத்து வைத்து விடுங்கள். அடுத்த மாதம் சம்பளம் வாங்கும் பொழுது மீண்டும் இந்த பரிகாரத்தை செய்வதற்கு உதவும். அதே போல் நீங்கள் வைத்து எடுத்த பணத்தில் முதல் செலவாக ஏதேனும் ஒரு எளியோருக்கு உணவு வாங்கித் தருவதாக அமைந்தால் மிகவும் நல்லது. அப்படி வாங்கி தர முடியாதவர்கள் உங்களுக்கு தெரிந்த ஏழ்மையில் உள்ள யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்யுங்கள். இது நிச்சயம் உங்கள் வருமானத்தை பல மடங்கு பெருக்கி தரும்.

இதே போல வருமானம் வரும் போது எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து பணத்தை பீரோவில் வைத்து விட்டு முதல் செலவாக இதை செய்யும் போது நிச்சயம் உங்களுடைய வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் உங்களுடைய பொருளாதார நிலை மேலும் பெருகிக்கொண்டே செல்வதற்கான வாய்ப்பு வரும். இவை அனைத்தையும் முழு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:செக் லீஃப் வைத்து மொத்தக் கடனை அடைக்க பரிகாரம்

வருமானம் உயர்வதற்கு நாம் பரிகாரம் செய்வதற்கு முன்பாக வருமானத்தை உண்டாக்குவதற்கான வழிமுறைகளை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு தொழிலையோ வேலையோ செய்தால் மட்டும் தான் வருமானம் வரும். வருமானத்தை பெருக்குவதற்கும் பல மடங்கு அது உயர்வதற்காக தான் நாம் சில பரிகாரங்களையும் தாந்த்ரீகங்களையும் கடைப்பிடிக்கலாம். அதை விடுத்து நாம் தான் பரிகாரத்தையும் தாந்த்ரீகத்தையும் கடைபிடிக்கிறோமே வருமான உயரும் என்று எதையுமே செய்யாமல் அமர்ந்திருந்தால் நிச்சயம் எந்த முன்னேற்றமும் இருக்காது. நம்முடைய உழைப்பும் நம்பிக்கையுடன் சேர்ந்து இந்த பரிகாரத்தையும் செய்யும் போது நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்