- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரம் பைரவர் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரம் பைரவர் வழிபாடு

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி அன்று மட்டும்தான் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்களுக்கு அவசர பண தேவை இருக்கிறது, தீராத பண சிக்கலில் சிக்கி இருக்கிறீர்கள், கடன் சுமை அதிகமாக இருக்கிறது என்றால், வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் பைரவரை, பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

காலப்போக்கில் உங்களுக்கு கடன் கஷ்டமே இருக்காது. பல வழிகளில் நிறைய பணம் சேர தொடங்கிவிடும். கடன் சுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்திடுவிங்க, அப்படி என்ன ஒரு சிறப்பு வாய்ந்த பைரவர் வழிபாடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை பைரவர் வழிபாடு

வாரம்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ராகு கால நேரம் இருக்கிறது. இந்த நேரத்தில் பைரவர் சன்னிதானத்திற்கு சென்று 2 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி, வெற்றிலை பாக்கு பூ பழம் தேங்காய் வாங்கி, கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்துப் போடுங்கள். மாதுளம் பழத்தை அப்படியே முழுசாக வைக்க கூடாது.

அந்த முத்துக்களை உதிர்த்து போட்டு பைரவருடைய பாதத்தில் அந்த மாதுளம் பழம் முத்துக்களை வைத்து, அர்ச்சனை செய்து, பழங்களை பிரசாதம் ஆக மீண்டும் திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்கள் இந்த மாதுளம் பழங்களை பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மீதம் கொஞ்சம் இருக்கும் மாதுளம் பழங்களை அங்கு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீங்கள் தானமாக கொடுத்து விட வேண்டும்.

- Advertisement -

வாரம் தோறும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் எவர் ஒருவர் மாதுளம் பழம் முத்துக்களை பைரவருக்கு பிரசாதமாக வைத்து வழிபாட்டை மேற்கொள்கிறீர்களோ, உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட கஷ்டம் அனைத்தும் உடனடியாக விலகும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்திற்கு அதீத சக்தி உண்டு. மாதுளம் பழம் மகாலட்சுமிக்கு சொந்தமான ஒன்று.

அஷ்டலட்சுமிகளுக்கும் செல்வம் எப்படி செல்கிறது. அஷ்டலட்சுமிகளுக்கான வரத்தைக் கொடுப்பவர் இந்த பைரவர். அந்த லட்சுமிக்கு சொந்தமான மாதுளம் பழம் முத்துக்களை, கொண்டு வந்து பைரவருக்கு வைத்து வேண்டி பாருங்கள். 3 வாரம், அதிகபட்சம் 5 வாரங்கள் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளும் போதே, உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நினைத்ததை நடத்தி காட்டும் சக்தி மந்திரம்

அதொடு நிறுத்திக்கொள்ள கூடாது வழிபாட்டை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அன்று இதேபோல செய்து வர வாழ்நாள் முழுவதும் கடன் இல்லாமல் வருமானம் பெருகிக்கொண்டே செல்வதை கண்கூடாக பார்க்கலாம். நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

சற்று முன்