- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை நீக்கி பண வரவை தரும் பஞ்சமி பரிகாரம்

தடைகளை நீக்கி பண வரவை தரும் பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

உக்ர தெய்வங்களில் மிகவும் முக்கியமான ஒரு தெய்வமாக கருதப்படுபவள் தான் வராகி அம்மன் என்றும் வராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது என்றும் நம் அனைவருக்குமே தெரியும். தேய்பிறை பஞ்சமியை போலவே வளர்பிறை பஞ்சமியும் மிகவும் சிறப்பு வாய்ந்த பஞ்சமியாகவே திகழ்கிறது. அன்றைய தினத்தில் கண்டிப்பான முறையில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் பணவரவை அதிகரிப்பதற்கும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை விலக்குவதற்கும் உதவக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவை தரும் பஞ்சமி பரிகாரம்

வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பான முறையில் பஞ்சமி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட அசைவத்தை தவிர்த்து சைவ உணவை உண்பார்கள். பலரும் அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். அருகில் ஆலயம் இல்லாதவர்கள் வீட்டில் வாராஹி அம்மனின் சிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள் அல்லது தீபத்தை மட்டுமாவது ஏற்றி வைத்து அந்த தீபச்சுடரொளியை வாராகி அம்மனாக நினைத்தும் வழிபாடு செய்வார்கள். நம்முடைய வேண்டுதல் என்னவோ அதற்கேற்றார் போல் வழிபாடு செய்யும் பொழுது வாராகி அம்மனின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

அந்த வகையில் வைகாசி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி என்பது சனிக்கிழமையோடு சேர்ந்து மே மாதத்தின் கடைசி நாளான 31 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஒரு எளிமையான ஆரத்தி வழிபாட்டை மட்டும் செய்தால் போதும். வாராஹி அம்மன் மனம் மகிழ்ந்து நமக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருள்வார்கள். இந்த ஆரத்தி வழிபாட்டை மே மாதம் 31ம் தேதி இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தேவையான முக்கியமான ஒரு பொருள் கற்பூரவள்ளி இலை. எப்படி துளசி இலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்களோ அதே போல் தான் கற்பூரவள்ளி இலையிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறார் என்றும் இந்த கற்பூரவள்ளி இலைக்கு அதிகப்படியான மருத்துவ குணம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கற்பூரவள்ளி இலையை மாலை 6:00 மணிக்கு முன்பாகவே செடியிலிருந்து ஐந்து இலைகள் என்ற வீதம் பறித்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் ஐந்து இலைகளையும் வைத்து ஒவ்வொரு இலையின் மீதும் மொட்டு உடையாத நல்ல கிராம்பாக ஒரு கிராம்பையும், ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும். இப்படி ஐந்து இலைகளிலும் வைத்துவிட்டு இந்த ஐந்து பச்சை கற்பூரத்தையும் ஏற்றி வீட்டில் இருக்கக் கூடிய வாராகி அம்மனுக்கு ஆரத்தி காட்ட வேண்டும். ஆராத்தி காட்டி முடித்த பிறகு அந்த பச்சை கற்பூர தீபத்தை வீடு முழுவதும் காட்ட வேண்டும். பச்சை கற்பூரத்தின் நறுமணமும், கிராம்பின் நறுமணமும், கற்பூரவள்ளி இலையின் நறுமணமும் வீடு முழுவதும் பரவுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தடைகளாக இருந்தாலும் அந்த தடைகள் விலகுவதோடு பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லையும் அவமானமும் நீங்க வாராகி வழிபாடு

மருத்துவ குணம் கொண்ட இந்த இலை பல இடங்களில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இலையாகவே திகழ்கிறது. இந்த இலையை பயன்படுத்தி நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளையும், எதிர்மறை ஆற்றல்களையும் விலக்கி சுகமான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்