இது வழக்கமான காளான் வகை உணவுகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட சுவையில் இருக்கும். மிளகுத்தூளின் காரமும், காளானின் சுவையும் சேர்ந்து ஒரு அட்டகாசமான காம்பினேஷனை கொடுக்கும். இது சாதத்துக்கு தொட்டுக்கறதுக்கும், ஸ்நாக்ஸாகவும் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். அருமையான சுவையில் வித்தியாசமான முறையில் அசத்தலான மிளகுத்தூள் காளான் வறுவல் எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
மிளகுத்தூள் காளான் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் :
காளான் – 200 கிராம் (பெரிய காளான்களை ரெண்டா வெட்டிக்கோங்க)
வெங்காயம் – 1 பெரியது (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 அல்லது 2 (கீறியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் (அல்லது உங்கள் காரத்திற்கு ஏற்ப)
சோம்புத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு (அலங்கரிக்க)
மிளகுத்தூள் காளான் வறுவல் செய்முறை விளக்கம் :
வாங்கி வந்த காளான்களை முதலில் மென்மையாக கழுவி நன்கு சுத்தம் பண்ணி, உங்களுக்கு பிடிச்ச சைஸ்ல வெட்டிக்கோங்க. ரொம்ப பொடியா வெட்டாம, கொஞ்சம் பெரிய துண்டுகளா இருந்தா, நல்லா இருக்கும். பின் ஒரு கடாயை அடுப்புல வச்சு, எண்ணெய் ஊத்துங்க. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை, கீறின பச்சை மிளகாய் போட்டு தாளிக்கணும்.
அடுத்து நீளவாக்கில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமா வதக்குங்க. வெங்காயம் நல்லா வதங்கினா தான் டேஸ்ட் நல்லா இருக்கும். வெங்காயம் வதங்கினதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிஷம் பச்சை வாசனை போற வரைக்கும் வதக்குங்க. இப்போ வெட்டி வச்சிருக்க காளானை சேர்த்து நல்லா கலந்து விடுங்க. காளான்ல இருந்து தண்ணி விடும். அந்த தண்ணி எல்லாம் சுண்டுற வரைக்கும் மீடியம் தீயில வதக்குங்க.
தண்ணி எல்லாம் சுண்டினதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நல்லா கலந்து விடுங்க. அடுத்து மிளகுத் தூள், சோம்புத் தூள் சேர்த்து நல்லா கலந்து, ஒரு ரெண்டு நிமிஷம் வதக்குங்க. மிளகுத்தூள் எல்லா பக்கமும் கோட் ஆகணும். கடைசியா அடுப்பை சிம்மில் வச்சு, ஒரு அஞ்சு நிமிஷம் மூடி போட்டு வேக விடுங்க. அப்போ தான் காளான் நல்லா வெந்து மசாலா உள்ள இறங்கும். சாப்பிடும் போதே டேஸ்ட் அவ்ளோ நல்லாவும் இருக்கும்.
இதையும் படிக்கலாமே:
9-6-2025 நல்ல வேலை கிடைக்க முருகன் மந்திரம்
மூடிய திறந்து பார்த்துட்டு, காளான் நல்லா வெந்து, கொஞ்சம் ட்ரையா இருந்தா அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. பின்னர் பொடியா நறுக்கின கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிச்சு சூடா பரிமாறுங்க! இந்த மிளகுத்தூள் காளான் வறுவல் ரொம்ப சிம்பிளா பண்ணிடலாம். பார்ப்பதற்கும், சாப்பிடுவதற்கும் அட்டகாசமாக இருக்கும். சாதம், சப்பாத்தி போன்றவற்றுக்கு சைடிஸ் ஆக சாப்பிட நல்ல காம்பினேஷன். டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா, நல்லா இருக்கும். கண்டிப்பா நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க! எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாமல் சுலபமான முறையில், வித்தியாசமான சுவையில் இந்த மாதிரி காளான் ஒருமுறை செஞ்சுதான் பாருங்களேன்.