- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று 12-6-2025 பிரபஞ்ச வசிய நாள்

இன்று 12-6-2025 பிரபஞ்ச வசிய நாள்

- Advertisement -

என்றாவது ஒருநாள் நம் கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்காதா, ஏதாவது ஒரு அதிசயம் நடந்து விடாதா, என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்றைய தினம் ஒரு வரப் பிரசாதம். இன்று 12-6-2025 பிரபஞ்ச வசிய நாள் 369. 12 என்ற எண்ணின் கூட்டுத்தொகை 3. மாதம் 6. வருடத்தின் கூட்டுத்தொகை 9. இன்று வியாழக்கிழமை, மூல நட்சத்திரத்தோடு சேர்ந்து இருப்பது இன்னொரு சிறப்பு. வியாழக்கிழமை குரு நாள்.

ஆகவே உங்களுடைய குருவை மனதில் நினைத்து குருவின் பெயரை ஒருமுறை சொல்லி, வணங்கி இந்த பதிவிற்குள் பயணம் செய்யுங்கள். குருவின் ஆசிர்வாதத்தோடு நாம் என்ன வழிபாடு செய்தாலும் அது நமக்கு முழு பலனை கொடுக்கும். உங்களுடைய குரு மகா பெரியவா அவர்களாக இருக்கலாம். சாய்பாபா அவர்களாக இருக்கலாம். அல்லது வேறு யாராவது சித்தரை நீங்கள் குருவாக ஏற்றுக்கொண்டு அவரை வணங்கி அவர் பெயரை மூன்று முறை சொல்லிவிட்டு, பதிவை படிக்க தொடங்கி பாருங்கள். நிச்சயம் இந்த பதிவு உங்கள் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

வியாழக்கிழமை குரு நாள் என்பதோடு சேர்த்து, வியாழக்கிழமை குபேர நாள் என்றும் சொல்லலாம். குபேர சம்பத்து நமக்கு கிடைத்துவிட்டால், வாழ்வில் இருக்கும் பெரிய பெரிய துன்பங்களுக்கு விடுதலை கிடைத்துவிடும். ஏனென்றால் வாழ்வில் இப்போது இருக்கக்கூடிய பெரிய கஷ்டம் பணம் கஷ்டம் தானே. அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று இரவு 12 மணிக்குள் பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 369 முறை உச்சரிப்பது சிறப்பான பலனைத் தரும்.

சில பேரால் இந்த மந்திரத்தை 369 முறை உச்சரிக்க நேரம் கிடைக்காது என்னும் பட்சத்தில் குறைந்தபட்சம் 27 முறையாவது இந்த மந்திரத்தை படித்து விட வேண்டும். பூஜையறையில் விளக்கு ஏற்றி, பூஜையறையில் அமர்ந்து படித்தாலும் சரி, அல்லது வரவேற்பறையில் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து ஒரே ஒரு ஊதுபத்தி வாசத்திற்காக ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை படித்தாலும் சரி.

- Advertisement -

உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். வியாழக்கிழமை மாலை 5:00 மணியில் இருந்து குபேர நேரம் துவங்கும். அந்த நேரத்தில் இந்த மந்திரத்தை படிப்பதும் அதிசக்தி வாய்ந்த பலனை தரும் ஏதோ ஒரு நேரம். நமக்கு தலையெழுத்து நன்றாக இருந்தால் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். நேரம் என்பது முக்கியமில்லை. இந்த மந்திரத்தை ஆத்மாக்கமாக படிப்பது தான் முக்கியம். குபேர சம்பத்து கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.

குபேர சம்பத்து கிடைக்க மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர
யோக குபேர தன தானிய சம்பத்து வசிய
ஐஸ்வர்ய குபேர தேவாய நமஹ !

இதையும் படிக்கலாமே: வியாபாரம் சிறக்க பரிகாரம்

உங்களுக்கு என்ன பண பிரச்சனைகள் இருக்கிறதோ, அதை எல்லாம் பிரபஞ்சத்திடம் முறையிட்டு அந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக எல்லா நல்லதும் உங்களுக்கு வசீகரமாகும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும். ஐஸ்வர்ய கடாட்சம் கிடைக்கும். குபேர சம்பத்து கிடைக்கும். சொல்ல முடியாத அளவுக்கு வாழ்வில் நன்மைகள் நல்ல நடக்க துவக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இவைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்